உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

11

ருவேங்கடத்தைச் சார்ந்த திருச்சானூர்த் திருஇளங் கோயிற் பெருமானுக்குப் பல்லவ வேந்தனாகிய தந்திவர்மன் ஆட்சியில் சோழநாட்டுச் சோழனார் உலக பெருமானார் திருவிளக்கு வைத்து அதற்கு முதற்பொருளாக முப்பது கழஞ்சு பொன் அளித்துள்ளமை அவ்வூர்க் கல்வெட்டால் அறியப்படு கின்றது'. இவன் கி. பி. எட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும், ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சோழநாட்டில் வாழ்ந்துகொண்டிருந்த ஒரு சோழர் குலக் குறுநில மன்னன்

ஆவான்.

கி. பி. 831 -ஆம் ஆண்டில் குமாராங்குசன் என்ற பெயருடைய சோழ மன்னன் ஒருவன் இருந்தனன் என்பது பல்லவ வேந்தனாகிய தெள்ளாற்று எறிந்த நந்திவர்மன் ஆட்சியில் வெளியிடப்பெற்ற வேலூர்ப்பாளையச் செப்பேடுகளால் வெளியாகின்றது.' அச்செப்பேடுகளில் முதலில் நந்திவர்மன் ஆட்சியாண்டு வரையப் பெற்று பிறகு மற்றைச் செய்திகள் குறிக்கப்பட்டிருத்தலால் அச்சோழன் நந்திவர்மப் பல்லவனுக்குத் திறை செலுத்திக் கொண்டிருந்த ஒரு சிற்றரசன் என்பது நன்கு துணியப்படும். அவன் சோழர் குலத்தில் தோன்றிய வீரர்தலைமணி என்றும், கொடையில் கர்ணனைப் போன்றவன் என்றும், நேர்மையான ஒழுக்கமுடையவன் என்றும் அச்செப்பேடுகள் புகழ்ந்து கூறுகின்றன. அவன் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சோழநாட்டில் குறுநில மன்னனாக வாழ்ந்துகொண்டிருந்த ஒரு சோழர் குலத்தோன்றல் என்பதில் ஐயமில்லை.

கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில், கும்பகோணம் என்று இந்நாளில் வழங்கும் குடமூக்கில் நடைபெற்ற போரில் பாண்டியன் சீமாறன் சீவல்லபன் பரச்சக்கர கோலாகலன் என்பான், சோழர், பல்லவர், கங்கர் முதலானோரைப் போரில் வென்று புறங்காட்டி ஓடச்செய்தனன் என்று சின்னமனூர்ச் செப்பேடுகள்' உணர்த்துகின்றன. கி. பி. 844 முதல் கி. பி. 866 வரையில் ஆட்சி புரிந்த தெள்ளாற்று எறிந்த நந்திவர்மன்,

1. S.I.1. Vol. XII, No. 43

2. Ibid, Vol. II, No. 98.

3. S.I. I., Vol. III, No. 206.