உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3 சோழன் ஒருவனைப் போரில் வென்றான் என்று அவன் மீது பாடப்பெற்ற நந்திக்கலம்பகம் என்ற நூல் கூறுகின்றது. எனவே, கடைச்சங்க காலத்திற்குப் பிறகு கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரையில் குறுநில மன்னராயிருந்த சோழர், சில காலங்களில் பாண்டியர்க்கும் சில காலங்களில் பல்லவர்க்கும் திறை செலுத்திக்கொண்டு அவர்கட்கு அடங்கி வாழ்ந்து வந்தனர் என்பது உய்த்துணரப்படுகிறது.

இதுகாறும் விளக்கியவாற்றால் சோழர், தம் வலி குன்றி யிருந்த காலத்தில் வேறு நாடுகட்குப் போகவில்லை என்பதும் சோழ நாட்டிலேயுள்ள பழையாறை நகரில் சிற்றரசராயிருந்து வந்தனர் என்பதும் நன்கு புலனாதல் காண்க.

இஃது இங்ஙனமாக, சோழர் குறுநில மன்னராயிருந்த காலத்தில் கடப்பை, கர்நூல் ஜில்லாக்களுக்குச்சென்று அங்கே வாழ்ந்துகொண்டிருந்தனர் என்பது சில வரலாற்று ஆராய்ச்சி யாளரது கொள்கையாகும்'. அவர்கள் அவ்வாறு கருதுவதற்கு இரு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஒன்று, சீன வழிப்போக்கனாகிய ஹியூன்சாங் என்பவன் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இடையில் தமிழகத்துக்கு வந்து சுற்றிப்பார்த்துவிட்டுத் திரும்பியபோது சோழ நாடு காஞ்சிபுரத் திற்கு வடமேற்கே இருப்பதாகத் தன் யாத்திரைக் குறிப்பில் வரைந்திருப்பது. மற்றொன்று, கர்நூல், கடப்பை ஜில்லாக்களில் கிடைத்துள்ள தெலுங்கச் சோழர் கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் அவர்கள் காவிரியாற்றிற்கு இரு மருங்கும் கரைகண்ட சோழன் கரிகாலன் வழியினர் என்று குறிக்கப் பெற்றிருப்பது. சோழ மன்னர்கள் ஏழு எட்டாம் நூற்றாண்டு களில் தமக்குரிய சோழநாட்டிலேயே இருந்தனர் என்பதற்குத்

1.

3

நந்திக்கலம்பகம். பாடல்கள் 14, 27, 31,42,81

2. Historical Sketches of Ancient Dekhan, pp. 205 & 206.

3. கி. பி. ஏழு எட்டாம் நூற்றாண்டுகளில் கடப்பை கர்நூல் ஜில்லாக்களிலிருந்த தெலுங்கச் சோழர், சோழன் கரிகாலன் வழியினருள் வேறு ஒரு கிளையினர் ஆவர். அவர்கள் எப்போது அங்குப்போய்த்தங்கினர். என்பது புலப்படவில்லை. அன்னோர் தெலுங்கராகவே மாறிவிட்டனர். தமிழகத்திற்கும் அவர்கட்கும் சிறிதும் தொடர்பில்லை. ஆகவே, அன்னோர் வரலாறு ஈண்டு எழுதப்படவில்லை.