உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

13

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்திகள் ஆகிய சமய குரவரது அருட்பாடல்களும் நந்திக்கலம்பகமும் வேலூர்ப் பாளையச் செப்பேடுகளும் சின்னமனூர்ச் செப்பேடுகளும் பெரிய புராணமும் தக்க சான்றுகளாக உள்ளன என்பது முன்னரே விளக்கப்பட்டது, ஆகவே, சோழர் குறுநில மன்னராயிருந்த காலத்தில் வேறு நாடு புகுந்து வதிந்தனர் என்ற கொள்கை வலியுடைத்தாகாமை உணர்க.