உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

கி.பி. எட்டாம் நூற்றாண்டிலிருந்த முத்தரையன், ‘தஞ்சைக் கோன்’1 எனவும் ‘தஞ்சை நற்புகழாளன்’2 எனவும் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டிருத்தலால், தஞ்சை மாநகர் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர் தலைநகராதற்கு முன்னர் முத்தரையர்க்குரிய சிறந்த நகரமாக இருந்தது என்பது நன்கு வெளியாகின்றது.

3

இனி, முத்தரையர் என்பார், தஞ்சைமா நகர்க்கு வடமேற்கே இந்நாளில் செந்தலை என்று வழங்கும் சந்திரலேகைச் சதுர்வேதி மங்கலத்திலிருந்து அதனைச்சூழ்ந்த நாட்டை ஆண்டு வந்த குறுநில மன்னர் ஆவர். தஞ்சைக் கண்மையிலுள்ள வல்லமும் அவர்கட்குத் தலைநகராக இருந்திருத்தல் வேண்டும் என்று தெரிகிறது." அவர்கள், பெரும்பிடுகு, மாற்பிடுகு, விடேல் பிடுகு, பகாப்பிடுகு முதலான பல்லவ அரசர்க்குரிய பட்டங்களை யுடைய வர்களாகக் காணப்படுவதால், அம்மரபினர் பல்லவர்க்குத் திறை செலுத்திக் கொண்டு அவர்கட்குக் கீழ்ச் சிற்றரசரா யிருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். பழந்தமிழ்க் குடியினரான முத்தரையரது வரையா வண்மை, பெருமுத்தரையர் பெரிது வந்தீயும் கருணைச் சோறு” என்று பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய நாலடியாரில் பெரிதும் புகழப் பட்டுள்ளது. அம்முத்தரையரே, கி.பி. எட்டாம் நூற்றாண்டில் தஞ்சைக்கும், திருச்சிராப்பள்ளிக்கும் இடைப்பட்ட ஒரு சிறு நாட்டைப் பல்லவர் ஆட்சிக்குட்பட்ட குறுநில மன்னரா யிருந்து ஆண்டு வந்தனர் என்று செந்தலைக் கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. அன்றியும், அவர்கள் பாண்டியரைப் போரிற் புறங்கண்ட செய்தியும் அச்செந்தலைக் கல்வெட்டுக்களால் புலனாகின்றது. ஆகவே, அவர்கள், பல்லவர்களோடு சேர்ந்து பாண்டியருடன் போர் நிகழ்த்தினர் என்பது தெள்ளிது'. 1. Eigraphia indica, Vol. XIII. pp. 142 and 144.

6

2. Eigraphia indica, Vol. XIII. pp. 142 and 144.

3. Inscription No. 202 of 1926.

4. Epi. Ind. Vol. XIII, pages 142 & 143.

5. நாலடியார், பா.200.

6. Epi. Ind., Vol. H. II, No. 10; The Pallavas by Jouveau - Dubreuil. p. 76.

7. Epi. Ind., Vol. XIII, p. 144 பல்லவன் வெல்லத்தென்னன் முனைகெடச் சென்றமாறன்.'