உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

17

அக்காலத்தில் பழையாறை நகரிலிருந்து அதனைச் சூழ்ந்த நிலப் பரப்பை ஆண்டு வந்தவர் சோழர் குடியினர் என்பதும், அன்னோர் தமக்குரிய சோழ மண்டலத்தைத் திரும்பப் பெற்றுத் தம் ஆட்சிக்குள்ளாக்குவதற்குக் காலங் கருதிக் கொண்டிருந்தனர் என்பதும் முன்னர் விளக்கப்பட்டன. எனவே, கி.பி. 846ஆம் ஆண்டில் பழையாறை நகரிலிருந்த விசயாலய சோழன் என்பான் முத்தரையர் மரபினனாய் ஒரு குறுநில மன்னனைத் தாக்கி அவன் ஆளுகைக்குட்பட்டிருந்த தஞ்சை மாநகரைக் கைப்பற்றிக் கொண்டனன் என்பது தேற்றம்'. முத்தரைய மன்னன்பால் திறை பெற்று வந்த பேரரசனும், அவனை அந்நாளில் விசயாலயன் படை யெழுச்சியினின்றும் காப்பாற்றாமல் கைவிட்டனன் போலும். பல்லாண்டுகளாகத் தாழ்ந்த நிலையில் புகழ் குன்றிக் கிடந்த சோழ இராச்சியத்தை மீண்டும் நிறுவி அதனை உயர் நிலைக்குக் கொணர அடிகோலியவன் விசயாலய சோழனே என்பது வரலாற்று ஆராய்ச்சியாளர் எல்லோரும் கருத்து வேறுபாடின்றி ஒப்புக் கொள்ளும் செய்தியாகும். எனவே, சோழர் பேரரசு நிறுவுவதற்கு விசயாலயனால் விதையிடப் பெற்ற காலம் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியேயாம் என்பது தெள்ளிதின் விளங்குதல் காண்க.

அக்காலத்தில் சோழ மண்டலத்தில் முடி சூடி ஆட்சி புரிந்து வந்த சோழ மன்னர்கள் எல்லோரும் இராசகேசரி, பரகேசரி என்ற இரு பட்டங்களையும் ஒருவர் பின் ஒருவராக மாறி மாறிப் புனைந்து கொண்டிருந்தனர் என்பது கல்வெட்டுக் களால் அறியப்படுகின்றது. அவற்றுள், பரகேசரி என்ற பட்டம் புனைந்து அரசாண்டவன் நம் விசயாலய சோழன் என்று தெரிகிறது. ஆகவே, இவன் தந்தை இராசகேசரி என்ற பட்டமுடைய வனாயிருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம்.

இவன் சற்றேறக்குறைய முப்பத்தைந்து ஆண்டுகள் ஆட்சி புரிந்திருத்தல் வேண்டும்.' இவனது இத்தகைய நீண்ட ஆட்சிக் 1. The Cholas, Vol. I, p. 135.

தஞ்சை, வல்லம் முதலான நகரங்கள் முத்தரையர்க்குரியவாயிருந்தன என்று செந்தலைக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. ஆதலால் அவர்களிடமிருந்துதான் விசயாலயன் தஞ்சையைக் கைப்பற்றியிருத்தல் வேண்டும்.

2. Annual Report on South Indian Epigraphy for 1908 - 09, page 86. Ins. No 447 of 1917.