உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

1

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -3

காலத்தில் நிகழ்ந்த செய்திகளை நன்கு அறிதற்குரிய கருவிகள் இக்காலத்தில் கிடைத்தில. இவன் தஞ்சை மாநகரில் துர்க்கைக்கு ஒரு கோயில் எடுப்பித்தான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் உணர்த்துகின்றன. நிசும்பசூதனி என்பது அவ்வம்மையின் பெயராம். இந்நாளில் அக்கோயில் தஞ்சையில் யாண்டுளது என்பது தெரியவில்லை. எனினும் தஞ்சை மாநகரின் மேலைக் கோட்டை வாயிலில் இப்பொழுதுள்ள கோடியம்மன் கோயிலே அதுவாக இருத்தல் வேண்டுமென்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

இவ்வேந்தன், தன் பகைஞர்களாகிய பேரரசர்களோடும் சிற்றரசர்களோடும் நிகழ்த்திய போர்கள் பலவாகும். இவன் சோழ இராச்சியத்திற்கு அடிகோலிய முதல் மன்னனாதலின் தன் வாழ்நாள் முழுமையும் பகைஞர்களோடு போர் புரிந்து காலங் கழிக்க வேண்டிய நிலையில் இருந்தனன். கடைச் சங்கத்திறுதிக் காலத்திலிருந்த சோழன் செங்கணானுக்கும் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டினிறுதியிலிருந்த முதல் ஆதித்த சோழனுக்கும் இடையில், மார்பில் தொண்ணுற்றாறு புண்கொண்ட வென்றிப் புரவலன் என்ற சோழ மன்னன் ஒருவன் மூவருலாக்களில் ஒட்டக் கூத்தரால் புகழ்ந்து பாராட்டப்பட்டுள்ளனன்'.

1. S. I. I., Vol. III. No, 205 verse 46.

2.

1. மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப் பாதத் தளைவிட்ட பார்த்திவனும் - மீதெல்லாம் எண்கொண்ட தொண்ணூற்றின் மேலுமிரு மூன்று புண்கொண்ட வென்றிப் புரவலனுங் - கண் கொண்ட கோதிலாத் தேறல் குனிக்குந் திருமன்றங்

2.

காதலாற் பொன்வேய்ந்த காவலனும்.

(விக்கிரம சோழன் உலா, 27 -32)

அணங்கு

படுத்துப் பொறையனைப் பொய்கைக்குப் பண்டு

கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோன் - அடுத்தடுத்துச்

சீறுஞ் செருவிற் றிருமார்பு தொண்ணூறும்

ஆறும் படுதழும்பின் ஆழத்தோன் – வேறு

பிரம வரக்கன் அகலம் பிளந்து

பரமர் திருத்தில்லை பார்த்தோன்

3. நல்லவன் பொய்கை களவழி நாற்பதுக்கு

(குலோத்துங்க சோழன் உலா, 38 -44)

வில்லவன் காற்றளையை விட்டகோன் - புல்லார் தொழும்புடைய வாகத்துத் தொண்ணூறு மாறுந் தழும்புடைய சண்டப்ர சண்டன் – எழும்பகல் ஈழ மெழுநூற்றுக் காதமுஞ் சென்றெறிந்து வேழந் திறைகொண்டு மீண்ட கோன்

(இராசராச சோழன் உலா, 35 - 40)