உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

19

சோழர் தம் நிலையில் தாழ்ந்து குறுநிலமன்னராயிருந்த அக்காலப் பகுதியில் அத்துணைப் புண்களைத் தன் மார்பில் கொள்ளுமாறு பல போர்களைப் புரிந்து வெற்றியெய்தியவன், முதல் ஆதித்த சோழன் தந்தையும் பிற்காலச் சோழர்குல முதல்வனும் சோழர் பேரரசிற்கு அடிகோலியவனும் ஆகிய இவ்விசயாலய சோழனே என்பது நன்குதுணியப்படும். விசயாலயன் என்பதே இவன் பல போர்கள் புரிந்து வெற்றி பெற்றமை பற்றி அக்காலத்தில் இவனுக்கு வழங்கிவந்த சிறப்புப் பெயராகவும் இருக்கலாம் ஆகவே, தன் மார்பில் தொண்ணூற்றாறு புண் கொண்ட வெற்றி வேந்தன் நம் விசயாலயனேயாவன். தான் கழ்த்திய போர்களில் எல்லாம் வாகை சூடுமாறு அருள் புரிந்தமையால் துர்க்கைக்குத் தன் தலைநகராகிய தஞ்சாவூரில் இவன் கோயில் எடுப்பித்து வழிபட்டனனாதல் வேண்டும். வீரர்கள் கொற்றவையைப் பரவுதல் இயல்பன்றோ?

கி. பி. 854 - ஆம் ஆண்டில் பாண்டியர்க்கும் பல்லவர்க்கும் குடமூக்கில் ஒரு போர் நடைபெற்றதென்பது சின்னமனூர்ச் செப்பேடுகளால் அறியக் கிடக்கின்றது'. இந்நாளிலுள்ள கும்பகோணம் என்ற நகரமே குடமூக்கு என்பது முன்னர் உணர்த்தப் பட்டது. மாறவர்மன் பரசக்கரக் கோலாகலன் என்னும் பாண்டி மன்னன் ஒருவன் அந்நகரில், பல்லவர், சோழர், கங்கர். மகதர் முதலானோரை வென்று புறங்காட்டியோடச் செய்தான் என்று அச்செப்பேடுகள் புகழ்ந்து கூறுகின்றன. இச்செய்தி நிருபதுங்க வர்மன் என்னும் பல்லவ அரசனது வாகூர்ச் செப்பேட்டிலும் சொல்லப்பட்டிருக்கின்றது. இக்குடமூக்குப் போரில் பல்லவ

அன்றியும், சங்கரசோழன் உலாவிலும் இவ்வேந்தன்,

66

புண்ணூறு தன்றிரு மேனியிற் பூணாகத்

தொண்ணூறு மாறுஞ் சுமந்தோனும்

99

என்று பாராட்டப் பெற்றிருத்தல் அறியற் பாலதாம்.

1. S. I. I., Vol. III. No, 206, The Larger Sinnamanur plates.

2. கொங்கலரும் பொழிற் குடமூக்கிற் போர்குறித்து

வந்தெதிர்த்த கங்கபல்லவ சோழ காலிங்க மாகதாதிகள்

குருதிப் பெரும்புனற் குளிப்பக் கூர்வெங்கணை தொடை நெகிழ்த்துப்

பருதியாற்ற லொடு விளங்கின பரசக்கர கோலாகலனும்

3. S. I. I., Vol. II Part 5, No. 98 postscript, pp. 514 & 515. Epi. Ind., Vol. XVIII, No. 2.