உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

ரோடு சேர்ந்து பாண்டியனை எதிர்த்துப் போர் புரிந்த சோழ மன்னன் இவ்விசயாலயனாகவேயிருத்தல் வேண்டும். ஆகவே, கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் சோழ மண்டலத்தின் தென்பகுதி பாண்டியர் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பதும் அதனைத் திரும்பக் கைப்பற்றுவதற்குப் பல்லவர், கங்கர் முதலானோர் துணைகொண்டு விசயாலய சோழன் முயன்றிருத்தல் வேண்டும் என்பதும் வெளியாதல் காண்க. ஆனால் அம்முயற்சியில் இவன் வெற்றி பெறவில்லை என்று தெரிகிறது. பின்னர், கி. பி. 862-ஆம் ஆண்டில் அரிசிலாற்றங்கரையில் நடைபெற்ற போரில் பல்லவ மன்னனாகிய நிருபதுங்க வர்மனும் இலங்கை வேந்தனாகிய இரண்டாம் சேனனும் ஒருங்கு சேர்ந்து மாறவர்மன் பரசக்கர கோலாகலனைத் தோற்றோடச் செய்தனர். இப்போர் நிகழ்ச்சியிலும் விசயாலய சோழன் கலந்து கொண்டனனாதல் வேண்டும். இவன், பல்லவன் நிருபதுங்கவர்மன் பக்கத்திற் சேர்ந்து போர் புரிந்திருத்தல்வேண்டும் என்பது திண்ணம். அரிசிற்கரைப் போரில் வெற்றி பெற்ற நிருபதுங்க வர்மனது கல்வெட்டுக்கள் கண்டியூர், கோவிலடி, லால்குடி முதலான ஊர்களில் இது முதற்காணப்படுதலால், சோழ மண்டலத்தில் பாண்டியர் ஆட்சிக்குட்பட்டிருந்த நிலப்பகுதியை அப்பல்லவ மன்னன் கைப்பற்றிக்கொண்டான் என்பது நன்கு புலனாகின்றது. எனவே, அந்நாளில் சோழ மண்டலத்தில் ஒரு பகுதி விசயாலய சோழன் ஆட்சிக்கும் மற்றொரு பகுதி பல்லவன் நிருபதுங்க வர்மன் ஆட்சிக்கும் உட்பட்டிருந்தனவாதல் வேண்டும்.

.

இஃது இங்ஙனமாக, பாண்டி நாட்டில் மாறவர்மன் பரசக்கர கோலாகலன் கி. பி. 862 - ஆம் ஆண்டில் இறக்கவே; அவன் மகன் இரண்டாம் வரகுண வர்மன் அரசுகட்டில் ஏறினான்’. அவனுக்குத் தன் தந்தை இழந்த சோணாட்டுப் பகுதியைத் தான் திரும்பக் கைப்பற்றவேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. அவன் தன் கருத்தை நிறைவேற்றுவதற்குக் காலங் கருதிக் கொண்டிருந்

1. Ibid., Vol. II Part 5, No. 98 Postscript, pp. 514 & 515. Epi. Ind., Vol. XVIII, No. 2.

2. S. I. I., Vol. V. No. 572; Ibid., Vol. VII Nos. 521. & 526; Ibid., Vol. IV., No.

531.

28. பாண்டியர் வரலாறு பக். 34.