உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பது முன்னர்க் கூறப்பட்டுளது. அந்நிலையில், முதல் ஆதித்த சோழனுக்கு உதவி புரிந்து வரகுண பாண்டியன் சோழ நாட்டில் ஒரு சிறு பகுதியையும் கவர்ந்து கொள்ளாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அப்பல்லவ வேந்தனது இன்றியமையாக் கடமையாயிற்று. ஆகவே, அபராஜித வர்மனும் பாண்டி மன்னனை எதிர்ப்பதற்குப் பெரும் படையுடன் புறப்பட்டான். கங்க நாட்டரசனாகிய முதலாம் பிருதிவிபதியும் தன் நண்பனாகிய அபராஜித வர்மனுக்கு உதவி புரியும் பொருட்டுப் படை திரட்டிக் கொண்டு சோழ நாட்டிற்கு விரைந்து வந்தான். எனவே, சோழன், பல்லவன், கங்கன் ஆகிய மூவேந்தரும் ஒருங்குசேர்ந்து பாண்டி வேந்தனை எதிர்த்தனர். கும்பகோணத் திற்கு வடமேற்கே ஐந்து மைல் தூரத்தில் மண்ணியாற்றின் வடகரையிலுள்ள திரும்புறம்பயத்தில்' பெரும் போர் நடை பெற்றது. போர்க்களத்தில் இரு மருங்கிலும் பல்லாயிரம் வீரர்கள் உயிர் துறந்தனர். பல்லவ மன்னனுக்கு உதவி புரிய வந்த கங்க அரசனாகிய முதலாம் பிருதிவிபதியும் பெரு வீரத்துடன் போர் புரிந்து அபராஜித வர்மன் வாகை சூடி மகிழும்படி செய்தான். அத்தகைய பெருவீரன் போர்க்களத்தில் இறுதியில் கொல்லப்பட்டான்'. எனினும், வரகுண பாண்டியன் தோல்வி யுற்றுச் சோழ நாட்டை விட்டு ஓடும் நிலையை எய்தினான். அபராஜித வர்மனும் ஆதித்தனும் வெற்றி பெற்றனர். இந்நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுற்ற அபராஜித வர்மன், தன்னாட்சிக் குட்பட்டிருந்த சோழ நாட்டுப் பகுதியையும் ஆதித்தனுக்கு வழங்கியிருத்தல் வேண்டும் என்று கருதற்கு இடம் உளது. த்திருப்புறம்பயப் பெரும் போரில் அபராஜிதவர்மன் வெற்றி பெற்றனனாயினும் அவனது படைப்பெருக்கம் இப்போர் நிகழ்ச்சியினால் ஒருவாறு குன்றிவிட்டது எனலாம். அந் நிலையில் அவன் தொண்டை மண்டலத்தையும் சோணாட்டுப் பகுதியையும் ஒருங்கே ஆளுதல் எங்ஙனம் கூடும்? ஆதலால், அவன் தன் ஆளுக்கைக்குட்பட்டிருந்த சோணாட்டுப் பகுதியை

1. கங்கநாடு என்பது மைசூர் இராச்சியத்தின் தென் பகுதியும் சேலம் ஜில்லாவின் வட பகுதியும் அடங்கிய நாடாகும், அதனை ஆட்சி புரிந்தவர் கங்கர் மரபினராவர்.

2. Udayendiram Plates of Prithivipati II, Verse 18.(S. I.I., Vol. II, No. 76.) 3. S. I. I., Vol. II, page 387.