உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

23

ஆதித்த சோழனுக்கு அளித்து விட்டுத் தொண்டை மண்டலத்தையும் திருமுனைப் பாடி நாட்டையும் தன்பால் வைத்துக்கொண்டனன். சோழ மண்டலத்தில் அபராஜிதவர்மன் காலத்துக் கல்வெட்டுக்கள் யாண்டும் காணப்படாமைக்குக் காரணம் அதுவேயாம். ஆகவே, திருப்புறம்பயப் பெரும் போரின் பயனாக, பாண்டியர் முதற்பேரரசின் வலிமையும் பல்லவர் வலிமையும் குறைந்துபோயின; சோழர் முடிமன்னராகிச் சோழ மண்டலம் முழுமையும் தம் ஆணை செல்லுமாறு ஆட்சி புரியும் பேறு பெற்றனர். எனவே, பல்லவர் ஆட்சியும் பாண்டியர் ஆட்சியும் சோணாட்டில் சிறிதுமின்றி ஒழிதற்கும் சோழரது ஆட்சி மீண்டும் நிலை பெறுதற்கும் ஏதுவாயிருந்த இத்திருப்புறம்பயப் பெரும் போர் தமிழக வரலாற்றில் முதன்மையான இடம் பெறுதற்குரிய ஒரு பெரிய நிகழ்ச்சியாகும். இப்பெரும் போருக்குப் பாண்டியன் நெடுஞ்செழியன் இளமையில் வென்ற தலையாலங்கானப் போரையும் ஆங்கிலேயர் வென்ற பிளாசிப் போரையும் ஒப்பாகக் கூறலாம். இப்போரில் இறந்த கங்க மன்னனாகிய முதற் பிருதிவிபதியின் நடுகற்கோயில் ஒன்றும் உதிரப்பட்டி என்ற பெயருடைய நிலப்பகுதியும் இக்காலத்தும் திருப்புறம்பயத்தில் உள்ளன. அன்றியும், கச்சியாண்டவன் கோயில் என்ற நடுகற் கோயிலும் போர் நிகழ்ந்த இடம் என்று கருதப்படும் பறந்தலை யொன்றும் அவ்வூரில் இன்றும் காணப் படுகின்றன. கச்சியாண்டவன் கோயில் என்பது அங்குப் போரில் இறந்த ஒரு பல்லவ மன்னனது நடுகல் நிற்கும் இடமாகவும் இருக்கலாம். ஆனால் அங்கு இறந்த பல்லவ அரசன் யாவன் என்பது இப்போது புலப்படவில்லை. எனினும், இவை எல்லாம் இக்காலத்தினர்க்கு அங்கு நிகழ்ந்த பெரும் போரை அறிவிக்கும் அடையாளங்களாக நிற்றல் அறியத் தக்கதாம். இதுகாறும் கூறியவாற்றால் திருப்புறம்பயத்தில் நடைபெற்ற பெரும் போரின் பயனாகச் சோழர் பேரரசு கி. பி. 880 - ஆம் ஆண்டில் தோன்றிற்று என்பது நன்கு தெளியப்படும்.

இனி, விசயாலய சோழன் இப்போர் நிகழ்ந்தபோது உயிர் வாழ்ந்திருந்தனன் என்பது ஒருதலை. ஆனால், இதில் இவன் கலந்து கொள்ளவில்லை. அதற்குக் காரணம் இவனது முதுமை