உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




25

4. முதல் ஆதித்த சோழன் கி. பி. 871-907

இவன், தன் தந்தை விசயாலய சோழன் கி. பி. 881 -இல் இறந்தவுடன் சோழநாட்டில் முடிசூடி அதன் ஆட்சியை ஏற்றுக்கொண்டனன். இவன் தந்தை பரகேசரியாதலின், இவன் இராசகேசரி என்ற பட்டம் புனைந்துகொண்டு அரசாண்டான். இவனுக்குக் கோதண்டராமன் என்ற மற்றொரு பெயரும் உண்டு என்பது கன்னியாகுமரிக் கல்வெட்டால் புலனாகின்றது.'

இவன், பல்லவ மன்னனாகிய அபராஜிதவர்மனை வென்று தொண்டைமண்டலத்தைக் கைப்பற்றிக்கொண்டான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றனர். அதற்கேற்ப இவனது ஆட்சியின் இருபத்துமூன்றாம் ஆண்டு முதல்தான்

வன் கல்வெட்டுக்கள் தொண்டைமண்டலத்தில் காணப்படு கின்றன”. அவற்றுள், திருக்கழுக்குன்றத்துக் கல்வெட்டு, ஈண்டுக் குறிப்பிடத் தக்கதொன்று'. அது, பல்லவ அரசர்களான கந்தசிஷ்யனும் வாதாபிகொண்ட நரசிங்கவர்மனும் திருக்கழுக் குன்றத்துச் சிவபெருமானுக்கு அளித்திருந்த இறையிலி நிலத்தை ஆதித்தன் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றிய பிறகு தன் ஆட்சியின் இருபத்தேழாம் ஆண்டில் உறுதிப்படுத்திய செய்தியை உணர்த்துகின்றது. இவ்வாறு இவ்வேந்தன் செய்தமைக்குக் காரணம் தொண்டைமண்டல ஆட்சியில் ஏற்பட்ட மாறுதலேயாம். செங்கற்பட்டு ஜில்லா திருமால்புரத்தில் காணப்படும் கல்வெட்டொன்று, ஆதித்த சோழன் திருமாற் பேற்றிறைவனுக்குத் தன் ஆட்சியின் இருபத்தொன்றாம்

1. Travancore Archaelolgical Series Vol. III, No. 34, Verse 55.

2. S. I. I., Vol. III, No. 205, Verse 49.

3. Ibid. Nos,I, and Ibid., Vol. V, No. 1368; Ibid., Vol. VI, No. 360. 4. Ep. Ind., Vol. III, No. 38A