உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3 ஆனால், பராந்தக சோழன் கொங்கு நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அதனைக் கைப்பற்றிக் கொண்டமைக்குச் சான்றுகள் இதுகாறும் கிடைக்கவில்லை. எனவே, அந்நாட்டிலுள்ள அவன் கல்வெட்டுக்கள் அவனது ஆட்சியின் தொடக்கத்திற்கு முன்னரே அந்நாடு சோழர்களால் கைப்பற்றப்பட்டிருத்தல் வேண்டும் என்பதை நன்கு புலப்படுத்துகின்றன. ஆகவே, ஆதித்தன் கொங்குநாட்டை வென்று கைப்பபற்றிக் கொண்டான் என்று கொங்கு தேச ராசாக்கள் சரிதம் கூறுவது உண்மையாதல் காண்க. அன்றியும், சைவசமய குரவர் மூவரும் பாடியருளிய தேவாரப் பதிகங்களைத் திருமுறைகளாகத் தொகுத்த நம்பி யாண்டார் நம்பி என்பவர், தாம் இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதியில் 'சிங்கத்துருவனைச் செற்றவன் சிற்றம்பலமுகடு

கொங்கிற் கனகம் அணிந்த ஆதித்தன் என்று கூறியிருப்பது, ஆதித்த சோழன் கொங்கு மண்டலத்தை வென்று அங்கிருந்து பொன் கொணர்ந்து தில்லைச் சிற்றபலமுகட்டை அப் பொன்னால் வேய்ந்த செய்தியை உறுதிப்படுத்துகின்றது. எனவே, கொங்குதேச ராசாக்கள் சரிதம் கூறும் ஒரு வரலாற்று நிகழ்ச்சி நம்பி யாண்டார் நம்பியின் வாக்கினால் வலியுறுதல் அறியத் தக்கது.

இனி, முதற்பிருதிவிபதியின் பெயரனும் மாற மரையன் புதல்வனுமாகிய இரண்டாம் பிருதிவிபதி என்பான் ஆதித்தன் ஆட்சியின் இருபத்துநான்காம் ஆண்டில் தொண்டை நாட்டிலுள்ள தக்கோலமென்னும் திருவூறற் கோயிலுக்கு ஒரு வெள்ளிக்கெண்டி அளித்தான் என்று அவ்வூரில் காணப்படும் கல்வெட்டொன்று கூறுகின்றது. ஆகவே, ஆதித்த சோழனும் கங்க நாட்டு வேந்தனும் அந்நாட்களில் நண்பர்களாக இருந்தனர் என்பது னிது புலப் படுகின்றது.

எனவே, கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், சேரன் சோழன் கங்கன் ஆகிய மூவேந்தரும் உற்ற நண்பர்களாயிருந்தனர் என்பது இதுகாறும் கூறியவற்றால் நன்கு விளங்குதல் காண்க.

1. திருத்தொண்டர் திருவந்தாதி, பாடல் 65.

2. Ep. Ind., Vol. XIX, No. 12; S. I. I., Vol. V. No. 1368.