உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

29

இனி, இவ்வாதித்த சோழன் காவிரியாற்றின் இருமருங்கும் பல சிவாலயங்களைக் கற்றளிகளாக எடுப்பித்தான் என்று அன்பிற் செப்பேடுகள் புகழ்ந்து கூறுகின்றன. இவன் தன் ஆட்சிக் காலத்தில் போர் நிகழ்ச்சிகள் எல்லாம் ஒருவாறு முடிவெய்திய பின்னர், சமயத்தொண்டு புரிவதற்குத் தொடங்கியிருத்தல் வேண்டும். சோழர்க்கு முன்னர் அரசாண்ட பல்லவ அரசர் காலங்களில் சில கோயில்களே கற்றளிகளாக அமைக்கப் பெற்றிருந்தன; பல, செங்கற் கோயில்களாகவே இருந்தன. அவற்றைக் கற்றளிகளாக அமைக்கவேண்டும் என்ற எண்ணம் இத்தகைய பெருவேந்தன் உள்ளத்தில் உதிப்பது இயல்பேயாம். இவன் எடுப்பித்த கற்றளிகளுள் திருப்புறம்பயத்திலுள்ள கோயிலையே முதன்மை வாய்ந்ததாகக் கொள்வது மிகப் பொருந்தும். கி. பி. 880 -ஆம் ஆண்டில் திருப்புறம்பயத்தில் நடைபெற்ற பெரும் போரின் பயனாக ஆதித்தனுக்குச் சோழ மண்டலம் முழுமையும் ஆட்சி புரியும் பேறு கிடைத்தது என்பது முன்னர் விளக்கப் பெற்றது. அதனால் பெருமகிழ்ச்சி யுற்ற இவ்வேந்தன் திருப்புறம்பயத்தில் எழுந்தருளியுள்ள இறைவன்பால் எல்லையற்ற அன்புடையவனாய் அப்பெருமானது திருக்கோயிலை அரிய சிற்பத்திறங்கள் அமைந்த பெருங் கற்றளியாக எடுப்பித்து அதற்கு ஆதித்தேச்சுரம் என்ற பெயரும் வழங்கினான். முற்காலத்தில் அக்கோயில் ஆதித்தேச்சுரம் என்றே வழங்கப்பெற்று வந்தது என்பது அதிற் காணப்படும் கல்வெட்டுக்களால் புலனாகின்றது'. அன்றியும் அக்கோயிலிற் காணப்படும் ஆதித்த சோழன் கல்வெட்டும் அவனால் அக்கோயில் முதலில் கற்றளியாக அமைக்கப் பெற்றிருத்தல் வேண்டுமென்பதை உறுதிப்படுத்துதல் அறியத் தக்கது. இவன், சைவசமயத்தில் பெரிதும் ஈடுபாடுடையவனாக ஒழுகிவந்தமையின் வேறு சிவன் கோயில்களும் எடுப்பித்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். இவன் கொங்குநாட்டிலிருந்து பொன் கொண்டு வந்து தில்லைச் சிற்றம்பலத்தின் முகட்டைப் பொன்வேய்ந்த செய்தி முன்கூறப் பட்டது. சைவத்திருமுறைகளுள் முதல் ஏழும் தொகுத்த நம்பியாண்டார் நம்பி என்ற பெரியார், இவனது ஆட்சியின் 1. Ep. Ind., Vol. XV, No. 5.

2. S. I. I., Vol. VI. No. 30.