உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -3 இறுதிக் காலத்தில் வாழ்ந்தவர் என்பது அவர் பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியினால்' நன்கு விளங்கும்.

இனி, தஞ்சாவூர் ஜில்லாவில் ஐயன்பேட்டைக் கண்மை யிலுள்ள இராசகிரி என்ற ஊர், இவ்வேந்தன் பெயரால் இராசகேசரிச் சதுர்வேதிமங்கலம் என்று அக்காலத்தில் வழங்கப் பெற்று வந்தது என்பது கோயில் தேவராயன்பேட்டையிற் காணப்படும் கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது.

ஆதித்த சோழனுக்கு இருமனைவியர் இருந்தனர். அன்னோர் இளங்கோப்பிச்சி, திரிபுவனமாதேவியாகிய வயிரியக்கன் என்போர். அவர்களுள் இளங்கோப்பிச்சி என்பாள், கி.பி. 897 - ல் திருமழபாடியில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு ஒரு நுந்தாவிளக்கு வைத்துத் திருவிளக்குப் புறமாகப் பத்துக் கழஞ்சு பொன்னும் அளித்துள்ளனள். இச்செய்தியையுணர்த்தும் அச்கல்வெட்டினால் இவள் வல்லவரையன் மகள் என்பதும் ஆதித்தனுடைய முதல்மனைவி என்பதும் நன்கு வெளியா கின்றன. ஆகவே, இவள் வேந்தனுக்குப் பட்டத்தரசியாயிருந் திருத்தல் வேண்டும் என்பது தெள்ளிது. மற்றொரு மனைவியாகிய திரிபுவன மாதேவி என்பாள், திருப்பூந்துருத்தி, திருச்சோற்றுத்துறை என்ற ஊர்களிலுள்ள சிவன்கோயில்களில் நுந்தா விளக்குகள் வைத்து அவற்றிற்கு நிவந்தமாகப் பொன்னும் கொடுத் துள்ளனள்". இவள் பல்லவர் குடியில் தோன்றியவள் என்பது திருப்பழனத்திலுள்ள ஒரு கல்வெட்டால் புலனாகின்றது.

1. (a) சிங்கத் துருவனைச் செற்றவன் சிற்றம் பலமுகடு கொங்கிற் கனக மணிந்த ஆதித்தன் குலமுதலோன் திருத்தொண்டர் திருவந்தாதி - பா. 65.

-

(b) செம்பொன் அணிந்துசிற் றம்பலத் தைச்சிவ லோக மெய்தி நம்பன் கழற்கீழ் இருந்தோன் குலமுதல் என்பர்

(c) புலமன் னியமன்னைச் சிங்கள நாடு பொடிபடுத்த

குலமன் னியபுகழ்க் கோகன நாதன் குலமுதலோன்

(மேற்படி, பா.82.)

(மேற்படி,பா.50)

இதில் ஆதித்த சோழன் சிங்கள நாட்டோடு போர் நிகழ்த்திய செய்தியை நம்பியாண்டார் நம்பி

குறிப்பிட் டுள்ளனர். ஆனால், அதனை விளக்கக்கூடிய வேறு ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

2. Ins. Nos. 35 & 254 of 1923; M. E. R. for 1924 part II,para 8.

3. Ep. Ind. Vol. XXVI, pp. 233 & 234.

4. Ins. 100 of 1931; S.I.I., Vol. XIII, No. 351.

5. 19. S.I.I., Vol. XIII, No. 304; M. E. R. for 1928, part II, para 2.