உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

.

35

இலங்கை வேந்தன் ஈழப்படையைத் தன் நாட்டிற்கு அழைத்துக் கொண்டான் என்றும் மகாவம்சம் கூறுகின்றது. ஆனால் இதுகாறும் கிடைத்துள்ள கல்வெட்டுக்களில் இச்செய்தி காணப் படவில்லை.

இப்போரில் பராந்தக சோழனோடு சேர்ந்துகொண்டு பாண்டியனை எதிர்த்துப் போர் புரிந்தோர் கொடும்பாளூர்க் குறுநில மன்னனும் கீழைப் பழுவூரிலிருந்த சிற்றரசனாகிய பழுவேட்டரையன் கண்டன் அமுதனும் ஆவர். சோழ மண்டலத்துப் பாம்புணிக் கூற்றத்து அரசூருடையான் தீரன் சென்னிப் பேரரையனும்' பரதூருடையான் நக்கன் சாத்தனும் பராந்தக சோழனுக்குப் படைத்தலைவராக இருந்தனர்.

இனி, இராசசிம்ம பாண்டியனது சின்னமனூர்ச் செப்பேடுகள் அவன் கொடும்பாளூர்த் தலைவனையும் தஞ்சை மன்னனையும் போரிற் புறங்கண்டான் என்று கூறுகின்றன". எனவே, இராச சிம்மனுக்கும் பராந்தகனுக்கும் அடிக்கடி போர்கள் நிகழ்ந்திருத்தல் கூடும். அவற்றுள் சிலவற்றில் அவன் வெற்றி எய்தியிருந்தலும் இயல்பே. இறுதியில் வெள்ளூரில் நடைபெற்ற பெரும்போரில் இராசசிம்மன் தோல்வியுறவே பராந்தகன் வெற்றிபெற்றுப் பாண்டிமண்டலத்தைக் கைப்பற்றினான். இவன் இராசசிம்ம னோடு வெள்ளூரில் நிகழ்த்திய இப்போர் கி. பி. 919 -ஆம் ஆண்டில் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது கீழைப் பழுவூரிலும் திருப்பாற்கடல் என்ற ஊரிலும் காணப்படும் இரு கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றது. இப்போர் நிகழ்ச்சியே பராந்தகன் பாண்டிநாடு முழுமையும் கைப்பற்றுவதற்குப் பெரிதும் ஏதுவாக இருந்தது எனலாம். பாண்டி நாட்டில் பராந்தகனது கல்வெட்டுக்கள் இவனது ஆட்சியின் இருபத்து நான்காம் ஆண்டு முதல்தான் காணப்படுகின்றன. ஆகவே,

1. The Cholas, Vol. I, pp. 144 and 145.

2. Ins 231 of 1926

3. S. I. I Vol. III, No. 99.

4. Ibid No. 206.

5. Ins. 231 of 1926; S. I. I Vol. III, No. 99.

6. S. I. I Vol. II, No. 101; Mysore Gazetteer, Vol. II part II, page 918.