உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

வன்

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3 ம்

ள்நாட்டுக் குழப்பங்களையும் கலகங்களையும் அடக்கி அந்நாடு முழுமையும் தன் ஆட்சியின்கீழ் அமைத்தற்கு அத்துணையாண்டுகள் ஆயின என்பது அறியத்தக்கது.

இராச்சியத்தை இழந்த இராச சிம்ம பாண்டியன் சிங்களத் திற்குச் சென்று அந்நாட்டரசனாகிய நான்காம் தப்புலன் பால் (கி.பி. 923-934) உதவி பெறுமாறு அங்குத் தங்கியிருந்தான். சோழனோடு போர்புரிந்து பாண்டி நாட்டைப் பெற்று அவனுக்கு அளிப்பதாக உறுதி கூறிய சிங்கள மன்னனும் அவ்வாறு உதவாமை கண்டு, அங்குத் தனக்குச் செய்யப்படும் பேருபசாரங்களைப் பெற்றுக்கொண்டு வாளாத் தங்கி யிருப்பதால் ஒரு பயனுமில்லை என்பதை யுணர்ந்த இராச சிம்மன், தன் முன்னோர்களிடமிருந்து தனக்குக் கிடைத்த சுந்தர முடியையும் பிற அரசச் சின்னங் களையும் அவ்வேந்தன்பால் அடைக்கலப் பொருளாக வைத்து விட்டு, தன்தாய் வானவன் மாதேவியின் பிறந்தகமாகிய சேரநாட்டிற்குச் சென்று அங்கு வசித்து வந்தான்'.

பராந்தக சோழன், பாண்டிநாடு முழுமையும் தன் ஆட்சிக் குட்படுத்திய பின்னர், அந்நாட்டின் தலைநகராகிய மதுரையில் முடிசூட்டுவிழா நடத்துவதற்கு முயன்றபோது பாண்டியர்க் குரிய முடியும் பிற அரசச் சின்னங்களும் அங்குக் காணப்பட வில்லை. அவையனைத்தும் நாட்டை விட்டுச்சென்ற இராசிம்ம பாண்டியனால் இலங்கைக்குக் கொண்டு போகப்பட்டு அந்நாட்டு வேந்தனிடம் கொடுக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்த பராந்தகன், அவற்றை வாங்கிவருமாறு சில தூதர்களைச் சிங்கள நாட்டிற்கு அனுப்பினான்'. அக்காலத்தில் அந்நாட்டில் அரசாண்டு கொண்டிருந்த நான்காம் உதயன் என்பான் அவற்றைக்

கொடுக்க மறுக்கவே, பராந்தகன் அவன் நாட்டின்மீது படை யெடுத்துச் சென்று அவற்றைத் தன் ஆற்றலால் கைப்பற்றிக் கொண்டுவர வேண்டும் என்று கருதினான். அதுபற்றியே ஈழநாட்டிற்குப் பெரும்படையொன்று அனுப்பப்பெற்றது. அந்நாட்டில் நடைபெற்ற போரில் ஈழநாட்டுப் படைத் தலைவன் இறந்தான். பராந்தகன் படை வெற்றி யெய்தவே, 1. பாண்டியர் வரலாறு - பக். 37.

2. The cholas, Vol. I. pp. 147 and 148.