உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

37

சிங்கள வேந்தனாகிய உதயன், வேறு வழியொன்றும் அறியாத வனாய்ப் பாண்டியன் கொடுத்துச் சென்ற முடியையும் பிறவற்றையும் எடுத்துக்கொண்டு இலங்கையின் தென்கீழ்ப் பகுதியாகிய ரோகண நாட்டிற்குப் போய்விட்டான்'. சோணாட்டுப் படை அவற்றைக் கைப்பற்ற முயன்றும் அங்குச்செல்ல முடியாமல் தன் நாட்டிற்குத் திரும்பிற்று. இவ்வரலாற்றை மகாவம்சத்தில் காணலாம். பராந்தகன் ஈழநாட்டுப் போரில் வெற்றி எய்தியும் தன் விருப்பத்தை நிறைவேற்ற இயலவில்லை. இவனது ஆட்சியின் 37 - ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் இவனை 'மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி வர்மன்" என்று குறிப் பிடுவதால் இவனது ஈழநாட்டுப் படையெழுச்சி கி. பி. 944 - ஆம் ஆண்டிற்கு முன்னர் நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்பது தெள்ளிது.

இவன், பாண்டி நாட்டையும் ஈழநாட்டையும் வென்ற செய்தி, கலிங்கத்துப்பரணிலும் குலோத்துங்க சோழனுலாவிலும் இராசராசசோழனுலாவிலும் சொல்லப்பட்டிருப்பது உணரற்

பாலதாம்".

-

இனி, பராந்தகனது ஆட்சியின் 15 ஆம் ஆண்டில் வரையப்பெற்ற உதயேந்திரச் செப்பேடுகள் இவன் இரண்டு வாணர் குல அரசர்களை வென்று அன்னோரது வாணகப்பாடி நாட்டைக் கங்க மன்னனாகிய இரண்டாம் பிருதிவிபதிக்கு

1. The cholas, Vol. I. pp. 147 and 148. (மகாவம்சக்குறிப்பு)

2. பராந்தக சோழனது விருப்பம் பிற்காலத்தில் முதல் இராசேந்திர சோழனால் நிறைவேற்றப் பட்டது என்பதை அவன் மெய்க் கீர்த்தியால் உணரலாம்.

3. Ins. 553 of 1920.

4. ஈழ முந்தமிழ்க் கூட லுஞ்சிதைத்

திகல் கடந்ததோர் இசைப ரந்ததும்

- கலிங்கத்துப்பரணி - இராசபாரம்பரியம், பா. 2

-

நரபதியர்

தாழமுன் சென்று மதுரைத் தமிழ்ப்பதியும்

ஈழமும் கொண்ட இகலாளி

- குலோத்துங்கசோழன் உலா, வரிகள் 44 46

-

பகலில்

எழு

ஈழ மெழு நூற்றுக் காதமுஞ் சென்றெறிந்து வேழந் திறைகொண்டு மீண்டகோன்

- இராசராசசோழன் உலா, வரிகள் 38 - 40