உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3 வழங்கியதோடு அவனுக்குச் செம்பியன் மாவலிவாணராயன் என்ற பட்டமும் அளித்தனன் என்று கூறுகின்றன. அன்றியும், சோழசிங்க புரத்திலுள்ள பராந்தகனது ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டுக் கல்வெட்டொன்று ‘வல்லாள' என்ற இடத்தில் நடை பெற்ற போரில் இரண்டாம் பிருதிவிபதி என்பான் பகைஞர் களை வென்று இவ்வேந்தனுக்கு உதவிபுரிந்தானென்று உணர்த்துவதோடு இவனால் வழங்கப்பட்ட வாணாதிராசன் என்ற பட்டத்தைப் பெற்றான் என்றும் கூறுகின்றது'. அக்கல்வெட்டில் குறிப்பிடப்பெற்ற 'வல்லாள' என்ற ஊர், வாணர்களின் தலைநகரமாகிய வல்லமாக 3 இருத்தல் வேண்டும். அன்றியும், அதில் குறிப்பிடப்பட்ட பகைஞரும் வாணர் களாகவே இருத்தல் வேண்டும். எனவே, வல்லத்தில் நடைபெற்ற போரில், பராந்தக சோழனும் இரண்டாம் பிருதிவிபதியும் ஒருங்கு சேர்ந்து வாணர்குல மன்னரை வென்றனர் என்பது நன்கறியப் படுகின்றது.

இனி, வாணர் என்பார், பாலாற்றுக்கு வடக்கே சித்தூர் ஜில்லா வரையில் அமைந்திருந்த நிலப்பரப்பாகிய வாணகப் பாடி நாட்டைப் பண்டைக்காலத்தில் ஆட்சிபுரிந்த ஓர் அரச மரபினர் ஆவர். அன்னோர், வல்லம், வாணபுரம் என்ற நகரங்களைத் தம் தலைநகரங்களாகக் கொண்டு இரண்டு நூற்றாண்டுகள் அப்பகுதியில் ஆட்சி புரிந்தனர். அவர்கள் மாபலியின் வழியில் வந்தவர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்வதைப் பல கல்வெட்டுக்களில் காணலாம்". அவர்களது நாடு பெரும் பாணப் பாடி என்றும் வடுகவழிமேற்கு என்றும் முற்காலத்தில் வழங்கப்பட்டது. தொண்டைமண்டலம் பல்லவர் ஆட்சிக்குப் பட்டிருந்த காலத்தில் வாணர்குல வேந்தர், அவர்கட்குத் திறை செலுத்திக்கொண்டு குறுநில மன்னராக இருந்து வந்தனர். முதல் ஆதித்தசோழன் அபராஜித வர்மனை வென்று தொண்டை

1. S. I. I. Vol. II, No. 76.

2. Ep. Ind., Vol. IV, pp. 221 - 225.

இது

3. வல்லம் என்பது வடஆர்க்காடு ஜில்லாவில் குடியாத்தந் தாலூகாவிலுள்ள ஓர் ஊர். தீக்காலிவல்லம் என்று பழைய கல்வெட்டுக்களில் காணப்படுகிறது; பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களுள் ஒன்று; இந்நாளில் திருவலம் என்று வழங்குகின்றது. 4. S. I. I. Vol. III, No. 45.