உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

39

மண்டலத்தைக் கைப்பற்றிய நாட்களில் வாணர் சுயேச்சை யெய்தி, பிறகு தனியரசு புரிந்துவந்தனர். ஆகவே, பராந்தக சோழன் அவர்களை வென்றடக்குவது இன்றியமையாத தாயிற்று. அம்முயற்சியில்தான் கங்கமன்னனாகிய இரண்டாம் பிருதிவிபதி என்பான், பராந்தகனுக்கு உதவிபுரியவந்து வல்லத்தில் நிகழ்ந்த போரில் வாணர்களை வென்று அதற்குப் பரிசிலாக வாணகப்பாடி நாட்டையும் செம்பியன் மாவலிவாண ராயன் என்ற பட்டத்தையும் இவ்வேந்தன்பால் பெற்றிருத்தல் வேண்டும் என்பது நன்கு வெளியாகின்றது.

பராந்தகன்பால் தோல்வியுற்றுத் தம் நாட்டை இழந்த வாணர்குல வேந்தர் இரண்டாம் விசயாதித்தனும் அவன் மகன் இரண்டாம் விக்கிரமாதித்தனும் ஆவர். பராந்தகன் கி.பி. 910 ஆம் ஆண்டில் இராசசிம்ம பாண்டியனோடு நடத்திய முதற்போருக்குப் பின்னர் வாணரை வென்றிருத்தல் வேண்டும். இவனது ஆட்சியின் ஆறாம் ஆண்டில், தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள புள்ளமங்கைக் கோயிலில் சிறு காலைச்சந்தி நடத்துவதற்கு நிவந்தமாக மாவலி வாணராயன் நிலம் வாங்கிக் கொடுத்தானென்று அவ்வூர்க் கல்வெட்டொன்று கூறுகின்றது. இரண்டாம் பிருதிவிபதி அவ்வாண்டிலேயே செம்பியன் மாவலிவாணராயன் என்ற பட்டத்துடன் விளங்கினான் என்பது அக்கல்வெட்டால் புலனா கின்றது. எனவே, அக்கங்க மன்னன் அப்பட்டம் பெறுவதற்கு ஏதுவாயிருந்த வல்லத்துப் போர், கி. பி. 913 ஆம் ஆண்டிற்கு முன்னர் நடைபெற்றதாதல் வேண்டும். ஆகவே, பராந்தகன் வாணரை வென்று அன்னோர் நாட்டைக் கி. பி. 911,912-ஆம் ஆண்டுகளில் கைப்பற்றியிருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும். வாணர்குல வேந்தனாகிய இரண்டாம் விசயாதித்தன் 1. S.I.I. Vol. III, Nos. 46 and 47.

2.

பராந்தகன்பால் தோல்வியுற்ற வாணர்குல மன்னர், இரண்டாம் விக்கிரமாதித்தனும் அவன் மகன் மூன்றாம் விசயாதித்தனும் ஆவர் என்பர் பேராசிரியர். திரு. K. A. நீலகண்ட சாஸ்திரியர். (The Cholas Vol. I Page 151) இரண்டாம் விசயாதித்தன் கல்வெட்டுக்கள். கி. பி. 909 - 10 -ஆம் ஆண்டுகளிலும் காணப்படுதலால் வல்லத்துப் போரில் அவன் கலந்து கொண்டு போர் புரிந்து உயிர் துறந்திருத்தல் வேண்டும் என்று காலஞ்சென்ற திரு. A. S. இராமநாத ஐயர் கூறியுள்ளனர்.

Ep. Ind., Vol. XXVI, p. 114.

3. Ep. Ind., Vol. XXVI, No. 10.