உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

போரில் இறந்தமையால் அவன்மகன் இரண்டாம் விக்கிரமாதித்தன் என்பவன், இராஷ்டிரகூட மன்னனாகிய மூன்றாம் கிருஷ்ண தேவனிடம் அடைக்கலம் புகுந்து, அவன் ஆதரவிலிருந்து கொண்டு தக்க காலத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தான்.

-

இனி, பராந்தகன் வைதும்ப மன்னனையும் போரில் வென்றான் என்று உதயேந்திரச் செப்பேடுகள்’ உணர்த்து கின்றன. வைதும்பர் என்பார் கி. பி. 9 ஆம் நூற்றாண்டில் ரேநாண்டு நாட்டை அரசாண்ட தெலுங்கர் என்றும் அன்னோர் கங்கர்க்குப் பகைஞராகவும் வாணர்க்கு நண்பராகவும் இருந்தவர் என்றும் வரலாற்றாராய்ச்சியில் வல்ல பேராசிரியர் ஒருவர் கூறுகின்றனர்'. பராந்தகன் வாணரோடு நிகழ்த்திய போரில் அவர்கட்குத் துணைவனாயிருந்த வைதும்ப வேந்தன் ஒருவனையும் வென்றிருத்தல் கூடும். ஆனால் பராந்தகன் போரில் வென்ற வைதும்பன் யாவன் என்பதும் அவன் எந்த நாட்டை ஆட்சி புரிந்து கொண்டிருந்தான் என்பதும் இப்போது புலப்படவில்லை. தோல்வியுற்ற வைதும்ப வேந்தனும் வாணரைப் போலவே இராஷ்டிரகூட மன்னனாகிய மூன்றாம் கிருஷ்ண தேவனிடம் அடைக்கலம் புகுந்து அவன்பால் தங்கியிருந்தான்.

வைதும்ப மகாராசன் என்னும் பட்டமுடைய இரண்டு சிற்றரசர், கி. பி. 961, 964, 965 -ஆம் ஆண்டுகளில் இருந்தனர் என்பது தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள திருக்கோவலூர், கிராமம் என்ற ஊர்களில் காணப்படும் மூன்றாம் கிருஷ்ண தேவன் காலத்துக் கல்வெட்டுகளால்' நன்கறியக் கிடக்கின்றது. எனவே, பராந்தகன்பால் தோல்வி யெய்திய வைதும்பராயன் அவ்விருவருள் ஒருவனாதல் வேண்டும். அன்றேல் அன்னோர்க்குத் தந்தையாதல் வேண்டும்.

1. Ep. Ind., Vol. XXVI, page. 114,

2. S. I. I., Vol. II, No. 76.

3. The Cholas, Vol. I, Page 152.

4. மூன்றாம் கிருஷ்ணதேவன் ஆட்சியின் கீழ் வைதும்ப மகாராசன் விக்கிரமாதித்தன் என்பவன், மலையமானாடு, வாணகோப்பாடி நாடு, சிங்கபுர நாடு, வெண்குன்றக் கோட்டம் என்பவற்றை ஆண்டுவந்தான் என்று ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது. (Ins. 16 of 1905) அதன் துணைகொண்டு வைதும்பர் வரலாற்றை அறிய இயலவில்லை.

5. Ep. Ind. Vol. VII, Pages 142 - 144.