உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3 கோவிந்தன் என்ற ஒரு புதல்வன் இருந்தான். அவன் வனப்பில் காமவேள் போன்றவன்' இந்திரனும் கி. பி. 918 -ல் அவனுக்கு ளவரசுப் பட்டம் கட்டியிருந்தான்'. அவ் விராஷ்டிரகூட அரச குமாரனுக்கு நம் பராந்தக சோழன் தன் மகள் வீரமாதேவியை மணஞ்செய்து கொடுத்து அவ்வரச குடும்பத்தை நெருங்கிய உறவினாற் பிணித்துக் கொண்டான். தன் தந்தை இறந்த பின்னர், நான்காம் கோவிந்தன் குந்தள நாட்டில் முடி சூடி, கி. பி. 934 வரையில் ஆட்சி புரிந்தான். அந்நாட்களில் அவன் செயல்கள் பொது மக்கட்கு மிக்க வெறுப்பை யுண்டுபண்ணின. அன்றியும் குறுநில மன்னர்களும் அரசாங்க அலுவலாளர்களும் அவன் செய்கைகளைப் பெரிதும் வெறுத்து அவன்பால் அன்பில்லாதவராயினர் ஆகவே குந்தள இராச்சியத்தில் அவனுக்கு ஆதரவு வரவரக் குறைந்துகொண்டே வந்தது எனலாம். அந்நாட்களில் கீழைச் சளுக்கிய மன்னர்களாகிய யுத்த மல்லனுக்கும் இரண்டாம் வீமனுக்கும் மனவேறுபாடு உண்டாகிப் பகை மூண்டது. கி. பி. 934 - ல் இராஷ்டிரகூட வேந்தனாகிய நான்காம் கோவிந்தன் யுத்தமல்லனுக்கு உதவி புரியவேண்டி இரண்டாம் வீமனை எதிர்த்துப் போர் புரிந்து தோல்வி எய்தினான்". அப்போது கோவிந்தனுடைய சிறிய தந்தையின் மகனாகிய மூன்றாம் கிருஷ்ண தேவன் என்பவன், நாட்டில் அவனுக்கு ஆதரவு சிறிதும் இல்லை என்பதை நன்குணர்ந்து, உள்நாட்டில் கலகமும் குழப்பமும் உண்டுபண்ணி, இராஷ்டிரகூடச் சிங்காதனத்தைக் கவர்ந்து தன் தந்தைக்கு முடி சூட்டினான்". எனவே, மூன்றாம் கிருஷ்ணதேவன் தந்தையும், மூன்றாம் இந்திரன் தம்பியுமாகிய மூன்றாம் அமோகவர்ஷன் என்பான் கி. பி.. 935 - ல் மானியகேட மாநகரில் இராஷ்டிரகூட வேந்தனாய் வீற்றிருந்து அரசாளத் தொடங்கினான். தன் 1. Ibid, Page 106.

2. Ep. Ind., Vol. XXVI, Pages 163 and 230.

3. Ibid, Pages 230 - 235.

4.Ep. Ind., Vol. XXVI, Page 232.

5. The Rashtrakutas & Their Times, page 107

Ep. Ind., Vol. XXVI, Page 164.

6. The Rashtrakutas & Their Times, pp. 108 & 109.