உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3 அவனது ஆட்சியும் ரட்ட மண்டலத்தில் நிலைபெறுவ தாயிற்று. அன்றியும், கங்க நாட்டரசனாகிய இரண்டாம் பூதுகனும் மூன்றாங் கிருஷ்ண தேவன்பால் நெருங்கிய உறவும் நட்பும் பூண்டு அவனுக்கு உற்றுழி யுதவும் நிலையில் இருந்தான். பராந்தகன்பால் தம் நாடுகளை இழந்து வருந்திய வாணரும் வைதும்பரும் மூன்றாம் கிருஷ்ண தேவனிடம் அடைக்கலம் புகுந்து அவனால் ஆதரிக்கப்பெற்று இரட்ட மண்டலத்தில் தங்கியிருந்தனர். அந்நிலையில் பராந்தகன்பால் பெருமதிப்பு வைத்துப் பேரன்புடன் ஒழுகிவந்தவனும் கங்கநாட்டின் தென் பகுதியை ஆட்சிபுரிந்து கொண்டிருந்தவனுமாகிய இரண்டாம் பிருதிவிபதி என்பான் கி. பி. 940 -ல் இறந்தான். அவன் புதல்வன் விக்கியண்ணன் என்பவனும் தன் தந்தை இறப்பதற்குமுன் இறந்துவிட்டான்' எனவே, சோழ இராச்சியத்திற்கு வடமேற்கே யிருந்த கங்க நாடு முழுவதும், கங்கருள் மற்றொரு கிளையைச் சேர்ந்தவனும் மூன்றாம் கிருஷ்ணதேவன் தமக்கையின் கணவனும் பராந்தக சோழனுக்குப் பகைவனும் ஆகிய இரண்டாம் பூதுகன் ஆட்சிக்குள்ளாயிற்று. ஆகவே, சோழ இராச்சியத்திற்கு வடக்கேயிருந்த நாடுகளில், பராந்தகனுக்குப் பகைவர்கள் மிகுந்து ஒருங்கு சேர்ந்திருந்தனர் என்பது தெள்ளிது.

இனி, பராந்தகனும் தன் மருகன் கோவிந்தன் இரட்ட மண்டலத்தை இழந்து தஞ்சைக்கு வந்த பிறகு, வடபுலத்தில் தனக்குப் பகைவர் தோன்றியிருந்தமையை உணராமலில்லை. எனவே, இவன் தன் முதற் புதல்வனும் பெருவீரனுமாகிய இராசாதித்தன் என்பான் பெரும் படையோடு திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூரிலிருந்து கொண்டு சோழ இராச்சியத்தின் வடபகுதியைக் கண்காணித்து வருமாறு கி. பி. 936 - ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்தான்'. திருநாவலூர் என்பது தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள திருக்கோவலூர் தாலூக்காவில் இந்நாளில் திருநாமநல்லூர் என்று வழங்கும் பேரூராகும். அவ்வூர், ராசாதித்தபுரம் என்றும் அங்குள்ள கோயில் இராசாதித்

1. The Cholas, இரண்டாம் பதிப்பு; பக்கம் 128

2.S. I. I., Vol. VII, Nos. 954. 958 and 977; M. E. R. for 1905 - 06.

"

அந்நாளில் இராசாதித்தன்பால் பெரிய யானைப் படையும் குதிரைப் படையும் இருந்தன என்று தெரிகிறது.