உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

47

படைவீரர்கள் சிறிதும் அஞ்சாமற் போர் புரிந்து தம் வீரத்தையும் ஆற்றலையுங் காட்டினர். வெற்றித் திரு எவர்க்குரித்தாகுமோ என்ற ஐயப்பாடும் ஏற்பட்டது. அந்நிலையில். கங்க மன்னனாகிய இரண்டாம் பூதுகன் விடுத்த அம்பொன்று, யானைமேலிருந்து போர் புரிந்து கொண்டிருந்த அரசகுமார னாகிய இராசாதித்தன் மார்பில் தைக்கவே, அவனும் விண்ணுலகடைந்தான்'. அந் நிகழ்ச்சியினால் சோணாட்டுப் படைவீரர்கள் மனமுடைந்து போகவே, இராஷ்டிரக்கூடப் படைகள் ஊக்கத்தோடு போர் புரிந்து வெற்றி எய்தின; மூன்றாங்கிருஷ்ணதேவனும் வாகை சூடினான். இப்போர் நிகழ்ச்சி, ஆனைமங்கலச் செப்பேடு களிலும் சொல்லப் பட்டிருக்கின்றது. பங்களூர்ப் பொருட் காட்சிச் சாலை யிலுள்ள ஆதகூர்க் கல்வெட்டொன்று', பூதுகன், இராசாதித்தன் யானைமேல் வீற்றிருந்த அம்பாரியையே தன்போர்க் களமாகக் கொண்டு போர்புரிந்து அவனைக் குத்திக்கொன்றான் என்றும் மூன்றாங் கிருஷ்ண தேவன் அவனது வீரச் செயலைப் பாராட்டி அவனுக்கு வனவாசிப் பன்னீராயிரமும் பிறவும் வழங்கினான் என்றும் கூறுகின்றது. கும்பகோணம், திருவிடை மருதூர், திருவெள்ளறை முதலான ஊர்களில் காணப்படும் கல்வெட்டுக்கள்'. இரா சாதித்தனை 'ஆனைமேற்றுஞ்சினார்’ என்று குறிப்பிடுவதால் அவன் யானைமேல் வீற்றிருந்தபோது உயிர் துறந்த செய்தி நன்கு வலியுறுதல் காண்க.

தக்கோலப் போரில் பெருவெற்றி யெய்திய மூன்றாங் கிருஷ்ணதேவன், தொண்டை நாட்டையும் திருமுனைப்பாடி நாட்டையுங் கைப்பற்றித் தன் ஆளுகையின்கீழ்க் கொண்டு 1. Ep. Ind., Vol. XXII, No. 34.

2. S. I. I., Vol. III, No. 205. Verse 54.

திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இச்செய்தியைக் குறிப்பிடுங்கால் இராசாதித்தன் மூன்றாங் கிருஷ்ண தேவனைப் போரில் வென்று பின்னர் வானுலகடைந்தான் என்று கூறுகின்றன.

3. Ep. Ind., Vol. VI. pp. 50 to 57.

வனவாசிப் பன்னீராயிரத்தோடு வெள்வோல் 300 - ம் (Bel Vol. 300) கின்சுகட் 70 - ம் (Kinsukad 70) வாகெனாட் 70 - ம் (Bagenad 70) புரிஜெரெ 300 - ம் (Purigere 300) பூதுகனுக்குக் கொடுக்கப் பட்டனவாம். (Ibid, p. 57)

4.S. I. I., Vol. III, Nos. 132 and 201. Ibid, Vol. V, No.720.