உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




50

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

இனி, பராந்தக சோழனது ஆட்சியின் 46 - ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்கள், சோழநாட்டில் கண்டியூர், திருச்சோற்றுத் துறை ஆகிய ஊர்களில் காணப்படுகின்றன. அவ்வாண்டிற்குப் பிறகு இவன் கல்வெட்டுக்கள், யாண்டும் கிடைக்கவில்லை. ஆகவே, இவன் எஞ்சியிருந்த சோழ இராச்சியத்தைச் சில ஆண்டுகள் வரையில் ஆட்சிபுரிந்து கி. பி. 953 -ல் இறந்தனனாதல் வேண்டும். இவன் தன் முதல் மகனும் பெருவீரனுமாகிய இராசாதித்தனைத் தன் ஆட்சியின் இறுதியில் போரில் இழக்க நேர்ந்தமை, இவனுக்கு ஆற்றொணாத் துன்பத்தையும் பெருங் கவலையையும் அளித்திருக்கும் என்பது திண்ணம். எனினும். தன் இராச்சியத்தில் ஆட்சி அமைதியாக நடைபெற வேண்டும் என்ற கருத்தினனாய், இவன் தன் இரண்டாம் புதல்வனாகிய கண்டராதித்த சோழனுக்கு, கி. பி. 950 ஆம் ஆண்டில் இளவரசுப் பட்டங்கட்டி அரசாங்க அலுவல்களைக் கவனித்து வருமாறு செய்தான்”. ஆகவே, இவன் நாட்டின் நலங்கருதித் தான் செய்தற்குரியதைத் தவறாமல் நிறைவேற்றியமை பெரிதும் பாராட்டற்பாலதாம்.

-

பராந்தகன், சிறந்த சிவபத்திச் செல்வம் வாய்க்கப்பெற்ற வனாதலின், தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன்வேய்ந்து அதனை உண்மையிற் பொன்னம்பலமாக்கினான். இச் செய்தியை ஆனை மங்கலச் செப்பேடுகளிலும் திருவாலங்காட்டுச் செப்பேடு களிலும் காணலாம்'. அன்றியும் இதனை,

வெங்கோல் வேந்தன் தென்னனாடும் ஈழமுங் கொண்டதிறற் செங்கோற் சோழன் கோழிவேந்தன் செம்பியன் பொன்னணிந்த அங்கோல் வளையார் பாடியாடும் அணிதில்லையம்பலம்4

என்று முதற் கண்டராதித்த சோழனும்

1. S. I. I., Vol. V, No. 570. Ins. 135 of 1931, Annual Report on South Indian Epigraphy for 1931, Part II, Para 7.

2. Ep. Ind. Vol. XXVI, page 84.

3. Ep. Ind., Vol. XXII, No. 34, Verse 17, S. I. I., Vol, III, No. 205, Verse 53.

4. ஒன்பதாம் திருமுறை - கோயிற்பதிகம், பா. 8.