உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

கோதிலாத் தேறல் குனிக்குந் திருமன்றங்

காதலாற் பொன்வேய்ந்த காவலனும்'

51

என்று கவிச்சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தரும் போற்றிப் புகழ்ந்திருத்தல் அறியற்பால தொன்றாம்.

இவ்வேந்தன் ஆட்சிக்காலத்தில் திருவிடைமருதூர்', திருவாவடுதுறை, திருச்செந்துறை, உறுமூர் ஆகிய ஊர்களிலுள்ள சிவன் கோயில்கள் கற்றளிகளாக ஆக்கப்பட்டன. அவற்றுள் திருவாவடுதுறைக் கோயில்* இவன் பொருளுதவி கொண்டு திருக்கற்றளிப் பிச்சன் என்ற படைத்தலைவனால் எடுப்பிக்கப் பெற்றது. திருச்செந்துறைக்கோயில்'. இவன் புதல்வன் அரிகுலகேசரியின் மனைவியாகிய பூதி ஆதித்த பிடாரியால் கட்டப்பட்டது. உறுமூர்க்கோயில்' இம்மன்னன் ஆணையின் படி ருங்கோளன் குணவன் அபராசிதன் என்ற தலைவன் ஒருவனால் அமைக்கப்பெற்றது.

சிதம்பரத்திற்கு மேற்கேயுள்ளதும் இந்நாளில் காட்டு மன்னார் கோயில் என்று வழங்குவதும் ஆகிய வீரநாரா யணச்சதுர்வேதிமங்கலமும் அதற்கு வடக்கேயுள்ள வீர நாராயணன் ஏரியும் இவன் அமைத்தனவேயாம். அன்றியும், சோழசிங்கபுரத்திற்கு அண்மையில் சோழவாரிதி' என்னும் ஏரி ஒன்று இவன் ஆட்சிக்காலத்தில் தோண்டப்பெற்றது.

இம்மன்னன், தன் வாழ்நாளில் ஏமகர்ப்பம், துலாபாரம் முதலான பல தானங்களைச் செய்தான் என்று உதயேந்திரச் செப்பேடுகள் கூறுகின்றன'. இவன் காலத்தில் குடவோலை பறித்துக் கிராம சபை உறுப்பினர்களைத் தெரிந்தெடுக்கும் முறையும் கிராம சபை அமைக்கும் முறையும் கிராம ஆட்சி

1.

விக்கிரமசோழன் உலா - வரிகள் 31, 32. -

2.S. I. I., Vol. III, No. 124; Ins. 258 of 1907.

9

3. Ins. 126 of 1925 and 143 of 1925.

4. S. I. I., Vol, III, No. 96.

5. Ins. 384 of 1913.

6. Travancore Archaeological Series, Vol. III, No. 34, Verse 60.

7. Ep, Ind, Vol. IV, pp. 221 - 25.

8. S. I. I., Vol, II, No. 76.