உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




52

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3 முறையும் எவ்வாறிருந்தன என்பது செங்கற்பட்டு ஜில்லா உத்தர மேரூரிலும் வேறு சில ஊர்களிலும் உள்ள கல்வெட்டுக்களால்' புலப்படுகின்றது. அவை, இவ்வேந்தனது ஆட்சித் திறத்தையும் அரசியல் முறைகளையும் நன்கு விளக்குவனவாகும்.

இவ்வேந்தனுக்கு வேறு சில பெயர்களும் அந்நாளில் வழங்கியுள்ளன என்பது கல்வெட்டுக்களால் அறியப்படு கின்றது. அவை, வீரநாராயணன், வீரசோழன், பண்டிதவற்சலன், குஞ்சரமல்லன், சங்கிராமராகவன், இருமடி சோழன் என்பன. அவற்றுள், வீரசோழன் என்ற பெயர். இவன் இராஷ்டிரகூட மன்னனாகிய கிருஷ்ணதேவனைப் போரில் வென்றமை பற்றி வழங்கியது என்று கன்னியாகுமரிக் கல்வெட்டு உணர்த்து கின்றது”. அஃது இவனது சோழசிங்கபுரக் கல்வெட்டில் கி. பி. ஆம் ஆண்டிலேயே காணப்படுவதால் அச்செய்தியை நம்பமுடியவில்லை. ஒருகால் இராஷ்டிரகூட மன்னனாகிய இரண்டாம் கிருஷ்ணதேவனுக்கும் இவனுக்கும் போர் நிகழ்ந்து அதில் இவன் வெற்றி பெற்றிருக்கலாம். அவன், இவன் தந்தை யாகிய ஆதித்தனுக்குப் பெண் கொடுத்த மாமன் என்பது முன் கூறப்பட்டது. எனவே, இருவர்க்கும் பகைமை எங்ஙனம் உண்டாயிற்று என்பது இப்போது புலப்படவில்லை.

916

-

இவன் புலவர்களை அன்புடன் ஆதரித்து வந்தமையால் பண்டிதவற்சலன்" என்று புகழப்பெற்றனன்போலும்; மற்போரில் வல்லவனாகவும் களிறுபோல் வலிமிக்கவனாகவும் விளங்கியமை பற்றிக் குஞ்சரமல்லன்" என்ற பெயர் எய்தியிருத்தல் வேண்டும்; இராமனைப்போல் ஈழநாட்டில் போர் நிகழ்த்தி வென்ற மையால் சங்கிராமராகவன் என்ற பெயர் பெற்றான்'. பாண்டி

1. Archaeological, Survey of India, 1904 - 05.

2. Travancore Archaeological Series, Vol, III, No. 34, Verse 58.

3. தஞ்சை ஜில்லாவில் ஐயன்பேட்டையைச் சேர்ந்த இராச கிரிக்கண்மையில் பண்டிதவற்சலச்சேரி என்ற ஊர் ஒன்று இவன் பெயரால் அமைக்கப்பெற்றிருந்தமை அறியத் தக்கது. (Ins. 264 of 1923)

4. திருவையாற்றுக்கு அண்மையில் கொள்ளிடத்தில் பிரிந்து திருப்புறம்பயம், திருவாப்பாடி, திருப்பனந்தாள் வழியாக ஓடும் மண்ணியாற்றிற்குக் குஞ்சரமல்லன் என்ற பெயர் அந்நாளில் வழங்கிற்று.

5. S. I. I., Vol. II, No. 76.