உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

53

மண்டலத்தின்மீது படையெடுத்துச் சென்று அதனை வென்று சோணாட்டோடு சேர்த்து அரசாண்ட காரணம்பற்றி இருமடி சோழன் என்று வழங்கப்பெற்றனன்.

பராந்தகனுக்குத் தேவிமார் பலர் இருந்தனர். அவர்களுள் இராசாதித்தன் தாயாகிய கோக்கிழானடியே பட்டத்தரசியாக விளங்கியவள். அவள் சேரமன்னன் மகள் என்பது உதயேந்திரச் செப்பேடுகளால் உணரப்படுகின்றது'. பராந்தகனுக்கு மற்றொரு சேரர்குலப் பெண்மணியும் மனைவியாயிருந்தனள் என்பது அன்பிற் செப்பேடுகளால் அறியப்படுகின்றது'. அவள், மழ நாட்டிலுள்ள பழுவூரில் வாழ்ந்துகொண்டிருந்த கேரள மன்னனாகிய பழுவேட்டரையன் மகள் ஆவள். அவ்வரசிபாற் பிறந்தவனே அரிஞ்சயன் என்ற அரச குமாரன் என்பது குறிப்பிடத் தக்கதாகும். பராந்தகனுடைய மற்ற மனைவியர், அருமொழி நங்கை', வில்லவன்மாதேவி", திரிபுவனமாதேவி, வளவன் மாதேவி, சோழசிகாமணி, சோழமாதேவி , தென்னவன் மாதேவி' என்போர்.

பராந்தகனுக்கு நான்கு புதல்வரும் இரு மகளிரும் இருந்தனர். அவர்களுள், இராசாதித்தன், கண்டராதித்தன், அரிஞ்சயன்', உத்தமசீலி" என்ற நால்வரும் புதல்வர் ஆவர். வீரமாதேவி, அனுபமா என்ற இருவரும் புதல்வியர் ஆவர். முதற்புதல்வனாகிய இராசாதித்தன் என்பான் தந்தையின்

1. Ibid.

2. Ep. Ind., Vol. XV. No. 5.

3. S. I. I. VII, No. 520.

4. Ibid, Vol. III, No. 110.

5. Ins. 130 of 1931; S. I. I., Vol. V, No. 541.

6. Ibid, No. 547.

7. S. I. I. Vol. V, No. 525.

8. Ibid, No. 524.

9. Ibid, No. 601.

10.S.I. I.Vol.III, No. 205; Ibid, Nos. 96, 101, 104 and 105 இவனுக்கு அரிகுலகேசரி என்ற பெயரும் உண்டு; இனி அரிகுல கேசரியும் அரிஞ்சயனும் ஒருவரல்லர் எனக் கருதுவாரும் உளர். (The cholas இரண்டாம் பதிப்பு 134 - ஆம் பக்கம்)

11. Ibid, Vol. V, No. 575.