உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

ஆட்சிக் காலத்தில் இராஷ்டிரகூடரோடு நிகழ்த்திய போரில் தக்கோலத்தில் உயிர் துறந்தான் என்பது முன் கூறப்பட்டது. புதல்வியருள் வீரமாதேவி என்பவள் இராஷ்டிரகூட மன்னனாகிய நான்காம் கோவிந்த வல்லவரையனை மணந்தவள். அவள், கி. பி. 935 -ல் தக்கோலத்துத் திருவூறல் பெருமானுக்கு நுந்தாவிளக்கு வைத்து அதற்கு நிவந்தமாக அறுபது கழஞ்சு பொன் அளித்துள்ளனள். மற்றொரு மகள் கொடும்பாளூர்ச் சிற்றரசன் ஒருவனை மணந்து வாழ்ந்தனள். இதனால் கொடும்பாளூர் தலைர்கள் சோழர்க்கு உற்ற நண்பராகவும் உறவினராகவும் அந்நாளில் இருந்தனர் என்பது உணரற் பாலதாகும்.