உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




55

6. கண்டராதித்த சோழன்

கி. பி. 950 - 957

கி.பி.950

1

முதற் பராந்தக சோழன் இறந்த பின்னர், அவன் இரண்டாம் புதல்வனும் முன்னரே இளவரசுப் பட்டம் கட்டப்பெற்றிருந்த வனுமாகிய கண்டராதித்த சோழன் கி. பி. 953-ல் முடி சூட்டப் பெற்றுச் சோழ இராச்சியத்திற்குச் சக்கரவர்த்தியாயினான். இவன் இராசகேசரி என்ற பட்டம் புனைந்து அரசாண்டான். இவன் தந்தை ஆட்சியின் இறுதியில், இராஷ்டிரகூட மன்ன னாகிய மூன்றாம் கிருஷ்ண தேவன் தொண்டை நாட்டையும் திருமுனைப்பாடி நாட்டையும் கவர்ந்து கொண்டமையால் சோழ நாடு மாத்திரம் இவன் ஆட்சிக்குட்பட்டிருந்தது. இவன் கல்வெட்டுக்கள் பாண்டி நாட்டில் யாண்டுங் காணப்படா மையால், சோழர்க்குத் திறை செலுத்திக்கொண்டு சிற்றரசனாய் வாழ்ந்து வந்த வீரபாண்டியன் என்பவன் இவன் காலத்தில் சுயேச்சை எய்திப் பாண்டி நாட்டில் தனியரசு புரியத் தொடங்கி யிருந்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும். அன்றியும், பாண்டி நாட்டில் காணப்படும் வீரபாண்டியன் கல்வெட்டுக் களாலும் இச்செய்தி உறுதி எய்துகின்றது'. எனவே, இவன் தந்தை ஆளுகையின் கீழிருந்த பாண்டி நாட்டையும் வீரபாண்டியன் கைப்பற்றிக்கொண்டமையால் எஞ்சியிருந்த சோழ நாட்டை மாத்திரம் இவன் ஆண்டு வந்தனன் என்பது தெள்ளிது. எனினும், பாண்டி நாட்டை மீண்டுங் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் இவ்வேந்தனுக்கு இருந்தது என்று தெரிகிறது. ஆனால், அவ்வெண்ணம் இவன் ஆட்சிக் காலத்தில் நிறைவேறவில்லை.

1. ஆனைமங்கலச் செப்பேடுகளும் திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் இச் செய்தியை அறிவிக்கின்றன.

Ep. Ind., Vol. XXII. No. 34; S. I. I, Vol. III, No. 205.

2. Ins. 548 of 1926; Ins. 624 and 625 of 1926.