உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




56

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -3

இவ்வரசன், காவிரியாற்றிற்கு வடக்கே கண்டராதித்தச் சதிர்வேதிமங்கலம் என்ற ஊர் ஒன்றை அமைத்தான் என்று ஆனைமங்கலச் செப்பேடுகள் கூறுகின்றன. அது, திருச்சிராப் பள்ளி ஜில்லா உடையார்பாளையம் தாலூகாவில் கொள்ளிடப் பேராற்றிற்கு வடகரையில் திருமழபாடிக்கு மேற்கே ஒரு மைல் தூரத்தில் இந்நாளில் ஒரு சிற்றூராக உளது. இப்போது அதனைக் கண்டி ராச்சியம் என்று வழங்குகின்றனர்.

இனி, கண்டராதித்தப் பேரேரி என்ற நீர்நிலை ஒன்றிருந்தது என்பது தென்னார்க்காடு ஜில்லா உலகபுரத்திலுள்ள ஒரு கல்வெட்டால் அறியப்படுகிறது'. அவ்வேரி இம்மன்னன் ஆட்சிக் காலத்தில் அமைக்கப் பெற்றதாதல் வேண்டும்.

இவ்வேந்தன் மிகுந்த சிவபத்தியும் செந்தமிழ்ப் புலமையும் ஒருங்கே அமையப் பெற்றவன். தில்லையம்பதியில் நடம்புரியும் திருச்சிற்றம்பலமுடையார் திருவடிகளில் பெரிதும் ஈடுபாடு உடையவன். அப்பெருமான் மீது இவன் பாடிய திருப்பதிகம் ஒன்று, சைவத் திருமுறைகளுள் ஒன்றாகிய ஒன்பதாம் திருமுறையில் ருத்தல் அறியத்தக்கது'. அப்பதிகத்தின் இறுதியிலுள்ள திருக்கடைக்காப்புப் பாடலில்' இவ்வரசன் தன்னைக் 'கோழி வேந்தன்' எனவும் 'தஞ்சையர் கோன்' எனவும் கூறியிருப்பது உணரற்பாலதாம்.

இவன், சைவ சமயத்தில் பெரிதும் பற்றுடையவனா யிருந்தாலும், வைணவம், சமணம் முதலான புறச்சமயங் களிடத்தில் சிறிதும் வெறுப்புக் காட்டியவனல்லன். இவன், தான் அமைத்த கண்டராதித்தச் சதுர்வேதிமங்கலம் என்ற நகரில் கண்டராதித்த விண்ணகரம் என்னுந் திருமால் கோட்டம் ஒன்று எடுப்பித்திருப்பதும் தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள பள்ளிச்

1. Ins. 140 of 1919.

2. திருவிசைப்பா. திருப்பல்லாண்டு (கழகப்பதிப்பு) பக்கங்கள் 87 - 91.

3. சீரான் மல்குதில்லைச் செம்பொனம்பலத்தாடி தன்னைக் காரார் சோலைக்கோழிவேந்தன் தஞ்சையர்கோன்கலந்த ஆரா வின்சொற் கண்டராதித்தன் அருந்தமிழ் மாலைவல்லார் பேராவுலகிற் பெருமையோடும் பேரின்பம் எய்துவரே

கண்டராதித்தர் திருவிசைப்பா - கோயிற்பதிகம், பா. 10

4. Ins. 78 of 1920.