உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




58

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

6

கண்டராதித்தனுக்கு மும்முடிச்சோழன் என்ற மற்றொரு பெயரும் வழங்கியுள்ளது'. சிதம்பரந் தாலுகாவிலுள்ள உடையார் குடியில் காணப்படுங் கல்வெட்டொன்று இவனை ‘மேற்கெழுந் தருளிய தேவர், என்று குறிப்பிடுவதும் அறியற்பாலதாகும். அச் சொற்றொடரின் உண்மைப் பொருள் யாது என்பது தெரிய வில்லை. இவன் மேற்றிசையில் பகைவரோடு போர் நிகழ்த்தி அதில் இறந்த செய்தி அவ்வாறு மங்கல வழக்காகக் கூறப் பட்டிருத்தல் வேண்டும் என்பது சில அறிஞர்கள் கொள்கை’. பண்டைச் சோழ மன்னருள் சிலர், குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்', குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்' என்று சங்க நூல்களிலும் 'தொண்டை மானாற்றூர்த் துஞ்சின உடையார்" 'ஆற்றூர்த் துஞ்சினதேவர்" ஆனைமேற்றுஞ்சின உடையார் 'பொன்மாளிகைத் துஞ்சின தேவர்” என்று கல்வெட்டுக்களிலும் சொல்லப்பட்டுள்ளனர். ஈண்டு எடுத்துக் காட்டப்பெற்ற அத்தொடர்கள் எல்லாம் அவ்வேந்தர்கள் எவ்வெவ்விடங்களில் இறந்தனர் என்ற செய்தியை மிகத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. ஆனால், 'மேற்கெழுந் தருளிய' என்ற அடை மொழி அவற்றைப்போல் இறந்த செய்தியை உணர்த்தவில்லை. இவ்வேந்தன் இறந்த செய்தி கூறப்பட்டிருந்தால் அதற்குரிய அடைமொழி அக்கால ஒழுகலாற்றின்படி அமைந் திருக்கும் என்பது திண்ணம். எனவே, 'மேற்கெழுந்தருளிய' என்ற தொடர்க்கு வேறு பொருள் இருத்தல் வேண்டும். அது, சோழ நாட்டிற்கு மேற்கேயுள்ள நாடுகளுக்கு இவ்வரசன் தல யாத்திரை சென்று திரும்பி வராமையை ஒருகால் குறிப்பினுங் குறிக்கலாம். சிவஞானியாக நிலவிய இம்முடி மன்னன், தன் அரசைத் துறந்து

1. Ins. 283 of 1908.

2. Ins. 540 of 1920.

3. Ep. Ind., Vol. XXVI, p. 84.

4. புறநானூறு - பாடல்கள் 58 & 60.

5. புறநானூறு - பாடல்கள் 34 & 46.

6. S.I.I., Vol. III, No. 42.

7. Ibid, Nos. 15, 16 and 17.

8. Ibid, Vol. V, No. 720.

9. Ibid, Nos. 723 and 980.