உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




60

-

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -3

1

கண்டராதித்தனுக்குப் பல ஆண்டுகள் வரையில் மகப்பேறின்றி இறுதியில் செம்பியன்மாதேவிபால் ஒருதவப் புதல்வன் பிறந்தனன். அவனுக்கு மதுராந்தகன் எனவும் உத்தம சோழன் எனவும் இரு பெயரிட்டு வழங்கலாயினர். தன் மகன் சிறு குழந்தையா யிருந்தமையால் தன் தம்பி அரிஞ்சயனை இளரவசுப் பட்டங்கட்டி அரசியல் துறையில் பழக்குவது இவனது இன்றியமையாத கடமையாயிற்று, ஆகவே, இவன் கி.பி. 953 ஆம் ஆண்டில் அரிஞ்சயனை இளவரசனாக்கிப் பட்டமுங் கட்டினான். மதுராந்தகன் இளைஞனாயிருந்தபோது கண்டராதித்த சோழன் கி. பி. 957- இல் சிவபெருமான் திருவடி நீழல் எய்தினான்'. செம்பியன் மாதேவி, தன் இளம் புதல்வன்பால் வைத்த அன்பின் பெருக்கினால் அவனை ஓம்பி வளர்த்தலையே தன் கடமையாகக் கொண்டு சிவஞானியாக நிலவிய கணவனைப் பிரிந்தும் உயிருடன் இருந்தனள். அவ்வரசி, சிவபெருமானுக்குப் பல்வகைத் தொண்டுகள் புரிவதிலேயே தன் வாழ்நாட்களைக் கழித்துவந்தனள் என்பது பல ஊர்களில் காணப்படும் கல்வெட்டுக்களால் நன்கு புலனாகின்றது. இக்காலத்தில் கோனேரி ராசபுரம் என்று வழங்கும் திருநல்லம் என்னுந் திருப்பதியில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு அவ்வம்மை தன் கணவன் பெயரால் 'கண்டராதித்தம்' என்னுங் கற்றளி அமைத்து, அதில் தன் கணவன் அவ்விறைவனை வழிபடுவது போல் ஒரு படிமம் வைத்திருப்பதும் அறியற்பால தாகும்’.

1. Ep. Ind., Vol. XXII, No. 34; Verse 22.

S. I. I., Vol. III, No. 205.

2. Ep. Ind., Vol. XXVI, p. 84.

3. அப் படிமத்தின் கீழ் அடியில் வரும் கல்வெட்டு உளது:- (1) "ஸ்வஸ்திஸ்ரீ கண்டராதித்ததேவர் தேவியார் மாதேவடி களாரான ஸ்ரீ செம்பியன் மாதேவியார் (2) தம்முடைய திருமகனார் ஸ்ரீ மதுராந்தக தேவரான ஸ்ரீ உத்தம சோழர் திருராஜ்யஞ் செய்த (3) ருளாநிற்க தம்முடையார் ஸ்ரீ கண்டராதித்ததேவர் திருநாமத்தால் திருநல்ல முடை யாருக்குத் (4) திருக்கற்றளி எழுந்தருளுவித்து இத்திருக் கற்றளியிலேய் திருநல்ல முடையாரைத் திருவடித்தொழு (5) கின்றாராக எழுந்தருளுவித்த ஸ்ரீ கண்டராதித்த தேவர் இவர்.’ (S. I. I., Vol. III, No. 146.)

""

இத்திருக்கோயிலில் நாள் வழிபாடும் பிற விழாக்களும் நடை பெறுவதற்குச் செம்பியன் மாதேவி நிலங்கள் வழங்கிச் செய்துள்ள ஏற்பாடுகள் படித்தின்புறத்தக்கன.