உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

67

சிங்கள மன்னன் செய்கையை யுணர்ந்த சுந்தர சோழன், தன் படைத் தலைவனும் கொடும்பாளூர்க் குறுநில மன்னனு மாகிய பராந்தகன் சிறிய வேளான் என்பவனைப் பெரும் படையுடன் சிங்கள நாட்டிற்கு கி. பி. 965-இல் அனுப்பினான். அவ்வாண்டில் அந்நாட்டில் நிகழ்ந்த போரில் அத்தலைவன் உயிர் துறந்தான். அச்செய்தி ‘ஈழத்துப்பட்ட கொடும்பாளூர் வேளான் சிறிய வேளான்' என்ற ஒரு கல்வெட்டுப் பகுதியினால்' அறியக் கிடக்கின்றது. ஆகவே, சுந்தர சோழன் ஈழ நாட்டு வேந்தனோடு நிகழ்த்திய போரில் வெற்றி பெறவில்லை என்று தெரிகிறது. நான்காம் மகிந்தன் தன் படைத்தலைவன் 'சேனா' என்பவனைப் பெரும் படையுடன் அனுப்பிச் சோணாட்டுப் படையை எதிர்த்துப் போர் புரியுமாறு செய்தனன் என்றும் அப்போரில் சிங்களப்படை வெற்றி யெய்தவே, சோழ மன்னன் ஈழ மன்னனோடு உடன்படிக்கை செய்து கொண்டு நட்புரிமை பெற்றனன் என்றும் இலங்கைச் சரிதமாகிய மகாவம்சம் கூறுகின்றது. ஈழ நாட்டிலுள்ள வெசகிரி என்ற இடத்தில் காணப்படும் மகிந்தனது கல்வெட்டொன்று', சேனா என்ற சிங்களப்படைத் தலைவன் தமிழ்ப்படையைப் போரில் வென்ற செய்தியை உறுதிப்படுத்துகின்றது.

சுந்தர சோழன்பால் தோல்வியுற்று ஓடியொளிந்த வீர பாண்டியன், மீண்டும் மதுரையம்பதியிலிருந்துகொண்டு ஆட்சி புரியத் தொடங்கினான். பாண்டி நாட்டில் காணப்படும் வீர பாண்டியன் ஆட்சியின் 18, 19-ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் அவன் கி. பி. 965, 966 -ஆம் ஆண்டுகளில் பாண்டி நாட்டிலிருந்து அரசாண்டனன் என்பதைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. எனவே, சுந்தர சோழன் மறுபடியும் பாண்டி நாட்டின் மேல் படையெடுப்பது இன்றியமையாததாயிற்று. அப்படை யெழுச்சியும் கி.பி. 966-ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. பாண்டி நாட்டுக்குப் பெரும் படையுடன் சென்று போர் நிகழ்த்திய

1. S.I.I., Vol. V, No. 980.

2. The cholas, இரண்டாம் பதிப்பு, பக்கம் 154.

3. Epigraphia Zeylanica, Vol. I, P. 30.

4. T. A. S., Vol. III, No. 23.