உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




68

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3 தலைவர்கள் சுந்தர சோழன் புதல்வனாகிய ஆதித்த கரிகாலன், கொடும்பாளூர் வேள் பூதி விக்கிரமகேசரி, தொண்டை நாட்டுச் சிற்றரசன் பார்த்திவேந்திரவர்மன் என்போர், அந்நாட் களில் ஆதித்த கரிகாலன், இளைஞனாயிருந்த போதிலும் பெரு வீரத்தோடு போர்புரிந்து வீரபாண்டியனைக் கொன்று வெற்றி மாலை சூடினான். அது பற்றியே அவ்வரசிளங் குமரன் ‘வீர பாண்டியனைத் தலைகொண்ட கோப் பரகேசரிவர்மன்' என்று கல்வெட்டுக்களில்' கூறப்பட்டுள்ளனன். அப்போரில் கலந்து கொண்டிருந்த தலைவர்களாகிய பூதி விக்கிரம கேசரியும் பார்த்திவேந்திரவர்மனும் தாம் வீரபாண்டியனைத் தலை கொண்டவர்கள் என்று தம் கல்வெட்டுக்களில் குறிப்பிட் டுள்ளனர். அவர்கள் பாண்டிநாட்டுப் போரில் படைத் தலைமை வகித்து அதனை நடத்திய தலைவர்களாதலின் அங்ஙனம் கூறிக் கொள்வதில் வியப்பொன்றுமில்லை. சுந்தர சோழன் கல்வெட்டுக்கள் பாண்டிநாட்டில் யாண்டும் காணப் படாமையால் அந்நாடு உடனே சோழர் ஆட்சிக்குட் படுத்தப் படவில்லை என்பது தேற்றம். ஆகவே, சுந்தர சோழன் அவ்வப் போது போரில் வெற்றி பெற்றதோடு அமைந்திருந்தன னேயன்றிப் பாண்டி நாட்டைக் கைப்பற்றி ஆட்சி புரியவில்லை என்பது நன்கு புலனாகின்றது.

இனி சுந்தர சோழனும் தன் தந்தையைப்போல் வடக்கே யுள்ள திருமுனைப்பாடி நாட்டையும் தொண்டை நாட்டையும் கைப்பற்றித் தன் ஆளுகைக்குள் கொண்டு வரவேண்டும் என்று எண்ணினான். அதனை நிறைவேற்றும் பொருட்டு அந்நாடு களிலிருந்த இராஷ்டிரகூடர்களின் பிரதிநிதிகளோடு இவன் போர் புரிந்து வெற்றியும் எய்தினான். இவனது ஆட்சியின் ஐந்தாம் ஆண்டு முதல் இவன் கல்வெட்டுக்கள் தென்னார்க் காடு, வட ஆர்க்காடு, செங்கற்பட்டு ஜில்லாக்களில் காணப் படுகின்றன'. அன்றியும், இவன் பிரதிநிதியாகத் தொண்டை நாட்டிலிருந்த பார்த்திவேந்திரவர்மன் கல்வெட்டுக்களும் அப்

1. S.I. I., Vol. III, No. 14, Ibid. Vol. VII, Nos. 74 and 800.

2. Ibid, Vol. III, Nos. 170, 177 and 179.

3.S.I. I., Vol. III, Nos. 114, 115, 116, 117 and 118. Ep. Ind., Vol IV, No. 48.