உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -3

சளுக்கியர் மரபினனாதல் வேண்டும்'. அவன் குந்தவையை மணந்த பிறகு சோழ நாட்டிலேயே தங்கிவிட்டனன் என்று தெரிகிறது.

மழநாட்டு அன்பில் என்னும் ஊரினனாய அநிருத்த பிரமாதி ராஜன் என்பான் சுந்தர சோழனுக்கு அமைச்சனாக இருந்தனன். அவனுக்குத் திருவழுந்தூர் நாட்டிலுள்ள கருணாகர மங்கலம் என்னும் ஊரினை இறையிலியாக

வ்வேந்தன் வழங்கினான். இது குறித்து அளிக்கப்பெற்ற செப்பேடுகள் அன்பிற் செப்பேடுகள் எனப்படும். இதுகாறுங் கிடைத்துள்ள சோழ மன்னரது செப்பேடுகளுள் இவ்வன்பிற் செப்பேடுகளே மிகப் பழமை வாய்ந்தவை.

இனி, சுந்தரசோழனது ஆட்சியின் இறுதிக் காலத்தில் திடுக்கிடத்தக்க நிகழ்ச்சியொன்று நடைபெற்று இவன் மன முடைந்து இரண்டொரு திங்கள்களில் இறக்கும்படி செய்து விட்டது. அஃது இவன் முதல் மகனும் பெருவீரனுமாகிய ஆதித்த கரிகாலன் கி. பி. 969 - ஆம் ஆண்டில் சோழ நாட்டில் சில வஞ்சகர்களால் கொல்லப்பட்டமையேயாம். சிதம்பரந் தாலுகாவைச் சேர்ந்த காட்டுமன்னார் கோயிலுக்கணித்தாகவுள்ள உடையார் குடியில் காணப்படும் கல்வெட்டொன்று' அவ்வரச குமாரனைக் கொன்றவர் யாவர் என்பதைத் தெள்ளிதின் உணர்த்து கின்றது. அக் கொடுஞ்செயலைத் துணிந்து செய்து முடித்தோர், சோமன் ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன், பரமேசு வரனான இருமுடிச்சோழ பிரமாதிராஜன். மலையனூரானான ரேவதாசக் கிரமவித்தன் என்போர். அந்நால்வரும் உடன் பிறந்தோர் என்பது அக் கல்வெட்டால் அறியக்கிடக்கின்றது. அவர்களுள் இருவர், பஞ்சவன் பிரமாதிராஜன், இருமுடி சோழ பிரமாதிராஜன் என்னும் உயர்ந்த பட்டங்கள் பெற்றவராக இருத்தலால் அவர்கள் அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்திருந்த அந்தணர் ஆவர். அவர்கள் அரசியல் அதிகாரிகளாயிருந்தும் தம்

1. வல்லவர் என்று தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பெற்றவர்கள் சளுக்கியரும் இராஷ்டிர கூடருமே யாவர். ஈண்டுக் குறிப்பிடப்பெற்ற வல்லவரையன் கீழைச் சளுக்கிய வேந்தன் ஆவன்.

2. Ep. Ind., Vol. XXI, No. 27.