உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம்-1

71

இளவரச னான ஆதித்த கரிகாலனை வஞ்சகமாகக் கொன்றமைக்குக் காரணம் புலப்படவில்லை. கண்டராதித்த சோழன் புதல்வனாகிய உத்தமசோழன் என்பவன், தான் அரசு கட்டில் ஏறும் பொருட்டு ஒரு சூழ்ச்சி செய்து அவனைக் கொல்வித்திருத்தல் கூடும் என்பது சிலர் கருத்து'. அதனையாராய்ந்து முடிவு காண்பதும் ஈண்டு இன்றியமையா ததேயாம்.

2

உத்தம சோழனுக்கு அக் கொடுஞ் செயலில் தொடர்பு இருந்திருப்பின், ஆதித்த கரிகாலன் தம்பியும் குடிகளால் அன்பு பாராட்டிப் போற்றப்பெற்றவனும் பெரியவீரனுமாகிய முதல் இராசராசசோழன் அரியணையைக் கைப்பற்றித் தானே ஆட்சி புரியத் தொடங்குவானேயன்றி அதனை அவ்வுத்தம சோழன் பெற்று அரசாள உடன்பட்டுத் தான் ஒதுங்கிக் கொண்டிருக்க மாட்டான். இராசராசசோழன் தன் சிறியதந்தையாகிய உத்தம சோழனுக்கு நாட்டை ஆட்சி புரிவதில் விருப்பமுள்ள வரையில் தான் அதனை மனத்தால்கூட விரும்புவதில்லை என்று தன் குடிகளிடம் கூறினான் என்பது திருவாலங்காட்டுச் செப்பேடு களால் அறியக்கிடக்கின்றது. * உத்தமசோழன் சூழ்ச்சியினால் தன் தமையன் கொல்லப் பட்டிருந்தால் இராசராசசோழன் அவன்பால் அத்துணை அன்பும் மதிப்பும் வைத்து அவ்வாறு கூறியிருக்கமாட்டான் என்பது ஒருதலை. உத்தமசோழன், இளவரசனாயிருந்தவனைக் கொல்லும்படி செய்து தான் பட்டம்பெற முயன்றிருந்தால் அவனுக்குக் குடிகள் ஆதரவும் அரசியல் அதிகாரிகள் கூட்டுறவும் என்றும் கிடைத்திருக்க மாட்டா. அதனால் உள் நாட்டில் அமைதியின்மையும் கலகமுமே ஏற்பட்டிருக்கும். ஆனால், சோழ இராச்சியத்தில் எப்பகுதியிலும் குழப்பம் சிறிதுமின்றி உத்தம சோழன் ஆட்சி மிக அமைதியாக நடைபெற்றது என்பது பல கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது. ஆகவே எக்காரணம் பற்றியோ உட்பகை கொண்டிருந்த இரண்டு அரசியல் அதிகாரிகளும் அவர்கள் உடன்பிறந்தார் இருவரும் ஒருங்குசேர்ந்து ஆதித்த கரிகாலனை வஞ்சகமாகக் கொன்று

1. The Cholas, இரண்டாம் பதிப்பு, பக்கங்கள் 157 - 158. 2. S.I. I., Vol. III, No. 205, Verse 69.

3.S.I.I., Vol. III, Nos. 128, 142, 143, 145 and 151.