உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

விட்டனர் என்பதும் இக்கொலை நிகழ்ச்சியில் உத்தம சோழனுக்குச் சிறிதும் தொடர்பில்லை என்பதும் நன்கு வெளி யாதல் காண்க.

அன்றியும்,

இராசராசசோழன் ஆட்சிக்காலத்துக் கல்வெட்டுக்கள்' செம்பியன் மாதேவியாரைக் குறிக்கு மிடங்களில் "ஸ்ரீ உத்தமசோழ தேவரைத் திருவயிறு வாய்த்த ஸ்ரீ செம்பியன்மாதேவிப் பிராட்டியார் எனவும், "ஸ்ரீ உத்தம சோழதேவர் தங்களாச்சியார் ஸ்ரீ பராந்தகன் மாதேவடிகளா ரான ஸ்ரீ செம்பியன்மாதேவியார்” எனவும் உத்தம சோழனைப் புகழ்ந்து கூறுவதால் ஆதித்த கரிகாலன் உத்தமன்சோழன் சூழ்ச்சியினால் கொல்லப்படவில்லை என்பது நன்கு தெளியப் படும்.

இனி, உத்தமசோழன் ஆட்சியில் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கட்குத் தண்டனை விதிக்கப்படாமல் இராசராச சோழன் ஆட்சியில் இரண்டாம் ஆண்டிலே விதிக்கப்பட்டிருத்தலால் அக்கொலை நிகழ்ச்சியில் உத்தம சோழனுக்கும் தொடர்பு இருந்திருத்தல் வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர் சிலர் கொள்கை. கொலை புரிந்தோருள் ஒருவனுக்கும் அவனைச் சார்ந்தோர்க்கும் கிடைத்த தண்டனை இராசராச சோழன் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டமை உடையார் குடிக் கல்வெட்டால் அறியப்படுகிறது. அக் கல்வெட்டின் துணை கொண்டு உத்தம சோழன்மீது குற்றங்காண்டல் எங்ஙனம் பொருந்தும்? மறைவில் நிகழ்ந்த அக்கொலையில் தொடர்பு டையவர் யாவர் என்பதை ஆராய்ந்து பார்த்து அனைவர்க்கும் தண்டனை விதிப்பதற்குள் சில ஆண்டுகள் கழிந்திருத்தல் கூடும். அதற்குள் உத்தமசோழன் ஆட்சியும் முடிவெய்தி யிருக்கலாம். அதனால் இராசராசசோழன் ஆட்சியில் எஞ்சி யோர்க்குத் தண்டனை விதிக்கும்படி நேர்ந்தமை இயல்பேயாம். ஆதலால், அக்கொலைபற்றி உத்தமசோழன் ஒருவருக்கும்

1. கொன்றவர்களுள் பாண்டிநாட்டு அரசியல் அதிகாரியாகிய பஞ்சவன் பிரமாதி ராஜனும் ஒருவனாயிருத்தலால் பாண்டி நாட்டவராய பகைவர் தூண்டுதலே இக்கொலை நிகழ்ச்சிக்குக் காரணமாதல் கூடும்.

2.S.I.I.,Vol. XIII, Nos. 14, 72, 144, 170, and 332.