உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம்-1

73

தண்டனை விதிக்கவில்லை என்று எத்தகைய ஆதாரமுமின்றி எவ்வாறு கூறமுடியும்?

சுந்தரசோழன் கி. பி. 969 - ல் தன் முதல் மகனாகிய ஆதித்த கரிகாலனை இழந்தமையால் ஆற்றொணாத் துன்பத்தில் ஆழ்ந்து அவ்வாண்டிலேயே காஞ்சிமா நகரிலிருந்த பொன் மாளிகையில்' உயிர் துறந்தான். அதுபற்றியே, இவ்வேந்தன் 'பொன் மாளிகைத் துஞ்சின னதேவர்' என்று சில கல்வெட்டுக்களில் குறிப்பிடப் பட்டுள்ளனன். இவன் மனைவியருள் வானவன் மாதேவி என்பாள், தன் கணவன்பால் அளவற்ற அன்புடையவளாதலின் பிரிவாற்றாமல் தானும் உடன்கட்டையேறி ஒருங்கே மாய்ந்தனள். அம்மாதேவியின் செயற்கருஞ்செயல் திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் சொல்லப்பட்டுள்ளது அன்றியும், திருக்கோவலூரிலுள்ள கல்வெட்டொன்று வானவன் மாதேவி நிகழ்த்திய அவ்வருஞ்செயலை எடுத்துக் கூறி,

செந்திரு மடந்தைமன் சீராஜ ராஜன் இந்திரசமானன் இராஜசர்வஞ்ஞனெனும் புலியைப் பயந்த பொன்மான் கலியைக் கரந்து கரவாக் காரிகை சுரந்த

முலைமகப் பிரிந்து முழங்கெரி நடுவணும் தலைமகற் பிரியாத் தையல் நிலைபெறுந்

தூண்டா விளக்கு ..

. மணிமுடி வளவன் சுந்தரசோழன் மந்தரதாரன் திருப்புய முயங்குந்தேவி

3

என்று பாராட்டுவது உணரற்பாலதாகும். அம்மாதேவி, தன் இளங்குழந்தையைப் பிரிந்து கணவனோடு உடன்கட்டை ஏறிய செய்தியைக் கூறும் சுரந்த, முலைமகப் பிரிந்து முழங்கெரி நடுவணுந் - தலைமகற் பிரியாத் தையல்' என்ற பகுதி படிப்போர் உள்ளத்தை உருக்குந் தன்மையது.

1. S.I. I., Vol. III, No. 142.

2. Ibid, Vol. II, No. 6. Ibid, Vol. V, Nos. 723 and 980.

3. Ibid, Vol. III, No. 205. Verses 65 & 66.

4. Ibid, Vol. VII, No. 863.