உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

நிலைபெற்றிருந்த அமைதியுமே இவன் பல கலைகளிலும் தேர்ச்சி பெறுதற்கு ஏதுக்களாக இருந்தன எனலாம்.

குலோத்துங்கனது சமயப்பற்று

3

இவன் தில்லை சிற்றம்பல வாணரிடத்து எல்லையற்ற பேரன்புடையவன் என்பது 'தில்லையில் நடஞ்செய் கமலங்களை வளைக்குங் சிந்தையபயன்' எனவும் 'நவநிதி தூய் - ஏத்தற் கருங் கடவுள் எல்லையிலானந்தக் கூத்தைக் களிகூரக் கும்பிட்டான் எனவும் ஆசிரியர் ஒட்டக்கூத்தர் கூறியுள்ளமையால் இனிது புலனாகின்றது. திருவாரூர்க் கல்வெட்டொன்று, இவன் தில்லைக் கூத்தபிரான் திருவடித்தாமரையிலுள்ள அருளாகிய தேனைப் பருகும் வண்டு போன்றவன் என்று கூறுவதும் இவ்வுண்மையை வலியுறுத்துதல் காண்க. இவன் தன் வழிபடு கடவுளாகிய தில்லையம்பலவாணரது திருக்கோயிலில் பற்பல திருப்பணிகள் புரிந்து அதனைச் சிறப்பித்தமை முன்னர் விளக்கப்பட்டுள்ளது. இவன், சைவ சமய குரவர் மூவரிடத்தும் அளவற்ற அன்புடையவன் என்பது அவர்கள் படிமங்களைத் திருவாரூர்க்கோயிலில் எழுந்தருளுவித்து வழிபாட்டிற்கும் விழாவிற்கும் நிவந்தமாக இறையிலி நிலங்கள் மிகுதியாக வழங்கியுள்ளமையால் நன்கு வெளியாகின்றது. எனவே, சிவபாதசேகரன் என்று பாராட்டப்படும் முதல் இராசராச சோழனைப்போல் இவனும் ஒப்பற்ற சிவபத்திச் செல்வம் வாய்ந்தவன் என்பது தெள்ளிதில் புலனாதல் காண்க.

அவைக்களப்புலவர்

இவன் தந்தையின் ஆட்சிக் காலத்தில் அவைக்களப் புலவராக விளங்கிய ஒட்டக்கூத்தர் இவனுக்குத் தமிழாசிரிய ராயமர்ந்து இவனைச் செந்தமிழ்ப் புலமை வாய்ந்த அரசனாகச் செய்தனர். அக்கவிஞர் பெருமான் இவன் அவைக்களப் புலவராகவும் இருந்தனர். இவனது இளமைப் பருவம் முதல்

1. மேற்படி, பா. 87.

ர்

2. குலோத்துங்க சோழன் உலா, வரிகள் 74-76.

3. S. I. I., Vol. IV, No. 397.

4. Ibid, Vol. VII, No. 485.