உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

99

நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைக்கப்பெற்ற அப்புலவர் பிரான் இவன் மீது பிள்ளைத்தமிழ் ஒன்றும் உலா ஒன்றும் பாடி இவனைச் சிறப்பித்துள்ளமை இவன் ஆட்சியில் நிகழ்ந்த ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். அவ்விரு நூல்களும் முறையே குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ் எனவும், குலோத்துங்க சோழனுலா எனவும் வழங்கி வருகின்றன. அந்நூல்களில் இவன் முன்னோர்களான சோழ மன்னர்களின் வரலாறுகளும், இவனுடைய செங்கோலின் மாட்சியும் சிவபத்தியும் இவன் புரிந்த தில்லைத் திருப்பணிகளும் இவனுடைய வன்மை வீரம் முதலான பண்புகளும் பிற சிறப்பியல்புகளும் கூத்தரால் கூறப்பட்டுள்ளன.

பிறபுலவர்கள்

இவ்வேந்தன் காலத்திலிருந்த மற்றொரு புலவர் தண்டியா சிரியர் ஆவர். அவர், இரண்டாம் நரசிம்மவர்மன் என்ற பல்லவ மன்னனுடைய அவைக்களப் புலவராகிய தண்டி என்னும் வடமொழிப் புலவர் இயற்றிய 'காவியா தர்சம்' என்ற வடமொழி அலங்கார நூலைத் தமிழில் மொழி பெயர்த்தவர். அவ்வணி நூலில் உதாரணச் செய்யுட்களும் அவரே பாடி அமைத்துள்ளனர். அப்பாடல்களுள் சிலவற்றில் நம் குலோத்துங்கனுடைய ஆற்றல் கொடை முதலான சிறந்த குணங்கள் அவ்வாசிரியரால் பாராட்டப்பட்டுள்ளன. அன்றியும், இவ்வரசனுடைய கங்கை கொண்ட சோழபுரத் தரண்மனையையும்* கவிச்சக்கரவர்த்தி யாகிய கூத்தரது வாக்கு நயத்தையும் இரண்டு உதாரணப் பாடல்களில் அவர் புகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். எனவே, தண்டியாசிரியர் ஒட்டக்கூத்தருடைய மாணவரா யிருத்தல் வேண்டும் என்று கருதுவதற்கு இடம் உளது. இவ்விரு புலவர்களும் மலரி என்னும் ஊரினராயிருத்தல் இக் கருத்தினை

1. History of the Pallavas of Kanchi, pp. 110 and 111.

2. தண்டியலங்காரம், சூ. 95, மேற்கோள்.

3. சென்று செவியளக்குஞ் செம்மைவாய்ச் சிந்தையுள்ளே

நின்றளவி லின்ப நிறைப்பவற்றுள் - ஒன்று

மலரிவருங் கூந்தலார் மாதர்நோக் கொன்று மலரிவருங் கூத்தன்றன் வாக்கு

(தண்டி,

(55600TL9, 48, GLOM.)

மேற்.)