உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




100

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4

ஓரளவு வலியுறுத்துதல் உணரற்பாலதாம். இஃது எவ்வாறாயினும், நம் குலோத்துங்கனால் ஆதரிக்கப்பெற்ற தமிழ்ப் புலவர்களுள் தண்டியாசிரியரும் ஒருவர் என்பது ஒருதலை.

மருதத்தூருடையான் குன்றன் திருச்சிற்றம்பலமுடையார் என்பார், தொண்டை மண்டலத்தில் களத்தூர்க் கோட்டத்திலுள்ள மருதத்தூரினர். இவர் சோணாட்டு உறத்தூர்க் கூற்றத்துப் பையூருடையான் வேதவன முடையான் மேல் ஒரு நூல் பாடி இரும்பூதி என்ற ஊரைப் புலவர் முற்றூட்டாகப் பெற்று அதனைப் பையூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு வழங்கியுள்ளனர் என்பது புதுக்கோட்டை நாட்டிற் காணப் படும் ஒரு கல்வெட்டால் புலப்படுகின்றது. இந்நிகழ்ச்சி கி.பி. 1145-ல் நிகழ்ந்ததாகும்.

1

குலோத்துங்கன் தன் ஆட்சிக் காலத்தில் பல புலவர்களை ஆதரித்துப் பாதுகாத்து வந்தான் என்பதைக் ‘கற்றவர் குடிபுடை சூழ் கற்பக இளவனமே" என்னுங் கூத்தர் வாக்கினால் நன்கறியலாம். இச்செய்தி, 'பெரும் புலவரும் அருங் கவிஞரும் - நரம்புறு நல்லிசைப் பாணருங் - கோடியருங் குயிலுவரும் நாடு நாடுசென் - றிரவலரா யிடும்பை நீங்கிப் புரவலராய்ப் புகழ்படைப்ப' என்னும் இவன் மெய்க்கீர்த்தியால்' உறுதியாதல் காண்க. இவ்வாறு புலவர் கவிஞர், பாணர் முதலானோர்க்கு இவன் புரவலனாக விளங்கியதை,

6

கோடியர் புலவர் விரலியர் பாணர்

குலகிரி களும்குறை நிறையத்

தேடிய நிதியங் குலோத்துங்க சோழன் உருட்டுக சிறுதேரே’4

என்னும் பிள்ளைத்தமிழ் இறுதிப் பாடலில் ஆசிரியர் ஒட்டக் கூத்தருங் கூறியிருத்தல் அறியத்தக்கது. இஃது இங்ஙனமாக, தமிழ்ப் புலவர் வரலாறு எழுதியோர், குலோத்துங்கன் கூத்தர்

1. Inscriptions of the Pudukkotai State. No. 129.

2. குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ், பா. 80

3. S. I. I., Vol. V, No. 645.

4. குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ், பா. 103.