உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

101

ஆகிய இருவர் மீதும் வரலாற் றுண்மைக்கு முரண்பட்ட கற்பனைக் கதைகளை எழுதிப் பொய்ச் செய்திகளைப் பரவச் செய்துள்ளமை பெரிதும் வருந்தற் குரியதாகும்.

1

இனி, நம் குலோத்துங்கன் காலத்தில்தான் புகழேந்திப் புலவர், சேக்கிழாரடிகள், கம்பர் ஆகிய புலவர் பெருமக்கள் இருந்தனர் என்று ஆராய்ச்சியாளருள் சிலர் எழுதியுள்ளனர். அன்னோர் கருத்து உறுதிபெறுதற்குத் தக்க சான்றுகள் இன்மையின் அதனை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. புகழேந்திப் புலவர் முதல் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சிக் காலமாகிய கி. பி. 13-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், சேக்கிழாரடிகள் மூன்றாங் குலோத்துங்க சோழன் ஆட்சியின் முற்பகுதியிலும், கம்பர் உத்தம சோழன் ஆட்சிக் காலத்திலும் இருந்தவர்கள் என்பது ஆராய்ச்சியாற் புலப்படுகின்றது. ஆகவே அப்புலவர் பெருமான்கள் மூவரும் வெவ்வேறு காலங்களில் நம் தமிழகத்தில் வாழ்ந்தோர் ஆவர்.

தலைநகர்

நம் குலோத்துங்கன் ஆட்சியில் தலைநகராக விளங்கிய நகரம் கங்கைகொண்ட சோழபுரமேயாம். இம் மாநகர் கங்காபுரி என்று குலோத்துங்க சோழன் உலாவிலும் கங்காபுரம்3 என்று தண்டியலங்கார மேற்கோள் பாடலிலும் கூறப்பெற்றிருத்தல் அறியற்பாலது. அன்றியும், தில்லை யம்பதியும் இவன் உவந்து வீற்றிருக்கும் ஒப்பற்ற நகராக இருந்தது எனலாம். அப் பெரும்பதி, குலநாயகராகிய கூத்தப்பிரான் தாண்டவம் பயிலும் தலமாதல் பற்றியே அத்தகைய சிறப்பினை எய்தியது என்க. விக்கிரம சோழபுரத் தரண்மனையிலிருந்து இவ் வேந்தன் அனுப்பிய உத்தரவுகள் கீழைப் பழுவூர் பிரமதேயம்,ஏமப்பேரூர் ஆகிய

1. The Colas, Vol. II. p. 75.

2. குலோத்துங்க சோழ னுலா, வரிகள் 117-118.

3. வண்புயலைக் கீழ்ப்படுத்து வானத் தருமலைந்து மண்குளிரச் சாயல் வளர்க்குமாந் - தண் கவிகைக் கொங்கா ரலங்கலன பாயன் குளிர்பொழில்சூழ் கங்கா புரமாளி கை.

4. Ins. Nos. 261 of 1926. 271 of 1915; 533 of 1921.