உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




102

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

ஊர்களில் வரையப்பட்டிருத்தலால் இவன் அந்நகரத்திலும் ஆண்டுதோறும் இரண்டொரு திங்களாதல் தங்கியிருத்தல் வேண்டும் என்று தெரிகிறது.

சிறப்புப் பெயர்கள்

1

இவனுக்கு அக்காலத்தில் வழங்கிய சிறப்புப் பெயர்கள், அபயன், அனபாயன், எதிரிலாப் பெருமாள், கலிகடிந்த சோழன்' திருநீற்றுச் சோழன்' பெரிய பெருமாள்" என்பனவாம். இவற்றுள், அபயன், திருநீற்றுச் சோழன் என்னும் இரு பெயர் களும் இவன் பாட்டன் முதற் குலோத்துங்க சோழனுக்கு முதலில் வழங்கிப் பிறகு இவனுக்கும் வழங்கி வந்தமை குறிப்பிடத் தக்கது. எஞ்சியுள்ள சிறப்புப் பெயர்களுள் அனபாயன் என்பது

வன் பிள்ளைத்தமிழில் காணப்படாமல் உலாவில் மாத்திரம் காணப்படுவதால் இப்பெயர் இவன் ஆட்சியின் முற்பகுதியில் வழங்கவில்லைபோலும்.

குலோத்துங்கனுடைய மனைவியாரும் புதல்வனும்

இவ் வேந்தனுக்குத் தியாகவல்லி, முக்கோக் கிழானடி என்ற இருமனைவியர் இருந்தனர் என்பது திருமழபாடியிலுள்ள கல்வெட்டொன்றால்' அறியப்படுகின்றது. அவர்களுள், தியாகவல்லியே பட்டத்தரசியா யிருந்தனள். அவ்வரசிக்குப் புவன முழுதுடையாள் என்ற சிறப்புப் பெயர் ஒன்றும் உண்டு. முக்கோக் கிழானடி இரண்டாம் மனைவியாவள். அவ்வரசியை மலாடர் குலமணிவிளக்கு என்று வனது மெய்க்கீர்த்தி கூறுவதால், அவள் மலையமானாடாகிய சேதி நாட்டை அந்நாளில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த ஒரு குறுநில மன்னன் மகளாயிருத்தல் வேண்டும் என்பது நன்கு வெளியாகின்றது.

1. S.I.I., Vol. VII No. 780

2. Ibid, No. 460.

3. Ibid, No. 407.

6

4. த.பரணி, தா. 773; குலோ. உலா, வரிகள் 415-416.

5. S.I.I., Vol. V, No. 645.

>

6. பெருங்கற்பில் மலாடர் குலமணி விளக்குத் - திருந்துநித் திலமணி முறுவல் தெரிவை -

முக்கோக் கிழா னடிகளும்'

(குலோத்துங்கன் மெய்க்கீர்த்தி, Ibid.)