உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

103

இவனுக்கு இராசராசன்' என்ற புதல்வன் ஒருவன் இருந்தனன். அவ்வரசகுமாரன் இவனுடைய இருமனைவியருள் யார் வயிற்றுப் புதல்வன் என்பது இப்போது புலப்படவில்லை.

இனி, இவனது ஆட்சியின் 16, 17-ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்கள்' சில ஊர்களில் காணப்படுவதால் இவன் கி. பி. 1150 வரையில் அரசாண்டு அவ்வாண்டிலே இறைவன் திருவடியை அடைந்திருத்தல் வேண்டும் என்பது தெள்ளிதின் உணரப்படும். இவன் தான் இறப்பதற்கு நான்கு ஆண்டுகட்கு முன் கி.பி. 1146-ல் தன் புதல்வனாகிய இராசராசனுக்கு இளவரசுப் பட்டம் கட்டி அரசியல் அலுவல்களில் பயிற்சி பெற்றுவரும்படி செய்திருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.

நம் குலோத்துங்கன் காலத்தில் இவனுக்குக் கீழ்ப்பட்ட சிற்றரசர்களாகவும் அரசியல் அதிகாரிகளாகவும் இருந்து ஆட்சி நன்கு நடைபெறுமாறு செய்தோர் பலர் ஆவர். அவர்களுள் கல்வெட்டுக்களால் அறியப்படும் சில செய்திகளை மாத்திரம்

ஈண்டுக் குறிப்பிடுவோம்.

1. அம்மையப்பன் கண்ணுடைப் பெருமாளான விக்கிரம சோழ சம்புவராயன்

இவன் பல்லவர் மரபினன்; செங்கேணி என்னுங் குடிப் பெயருடையவன்; தொண்டை மண்டலத்தில் வட ஆர்க்காடு தென்னார்க்காடு ஜில்லாப் பகுதியில் அரசாண்டு கொண்டிருந்த ஒரு சிற்றரசன்; சம்பவராயன் என்னும் பட்டமுடையவன்; இவன் விக்கிரம சோழன் ஆட்சிக் காலத்திலிருந்த செங்கேணி அம்மையப்பன் நாலாயிரவன் என்பவனுடைய புதல்வன் ஆவன். இவன் நம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில் வட -ஆர்க் காடு ஜில்லாவில் திருவல்லம், சோழபுரம் என்னும் ஊர் களிலுள்ள சிவாலயங்கட்குச் சில வரிகளால் வரும் பொருள்

1. பொன்னிற் குயிற்றிப் புறம்பிற் குறும்பனைத்து

முன்னர்க் கடலகழின் மூழ்குவித்த – சென்னி

திருமகன் சீராச ராசன்,

(இராச. உலா. வரிகள் 65-67)

2. S.I.I.,Vol. VI, No. 134; Ibid, Vol. IV, No. 1044; Ins. 60 of 1908.

3. Ep. Ind., Vol. X, p. 138.