உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




104

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

களை அளித்துள்ளனன் என்பது அவ்வூர்க் கல்வெட்டுக்களால்' புலனாகின்றது.

2. ஏழிசை மோகன் ஆட்கொள்ளியான குலோத்துங்க சோழ காடவராயன்

இவன் பல்லவர் குலத்தில் தோன்றிய ஒரு தலைவன்; கி. பி. 1136-ல் தென்னார்க்காடு ஜில்லாவில் திருமாணிகுழியைச் சார்ந்த நிலப்பரப்பில் நாடு காவல் புரியும் அரசாங்க அதிகாரியாய் நிலவியவன்; அரசனால் அளிக்கப்பெற்ற குலோத்துங்க சோழ காடவராயன், கச்சிராயன் என்னும் பட்டங்கள் பெற்றவன். இவன் திருநாவலூர், திருவதிகை, விருத்தாசலம் ஆகிய ஊர் களிலுள்ள சிவாலயங்கட்கு நிவந்தங்கள் அளித்தும் அணிகலன்கள் வழங்கியும், திருப்பணி புரிந்தும் தொண்டுகள் செய்திருத்தலால், இவன் ஒப்பற்ற சிவபக்தியுடையவன் என்று தெரிகிறது. இவன், தன் அறிவாற்றல்களால் அரசியலில் படிப் படியாக உயர்ந்து, சிறந்த பட்டம் பதவிகள் பெற்றுத் தென்னார்க்காடு ஜில்லா விலுள்ள திருமுனைப்பாடி நாட்டில் ஒரு சிற்றரசனா யிருந்தான் என்பது இவன் கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றது.' இவன், ஆளப்பிறந்தான் எனவும் அரச நாராயணன் எனவும் தன்னைக் கூறிக்கொண்டிருத்தலைக் கல்வெட்டுக்களில் காணலாம். எனவே அழிந்தொழிந்த பல்லவர் பேரரசை மீண்டும் நிறுவுதற்குக் காலங் கருதிக் கொண்டிருந்த பல்லவ அரச குமாரர்களுள் இவன் முதல்வனாதல் வேண்டும். இவன் தொடங்கிய அம்முயற்சி மூன்றாம் இராசராச சோழன் ஆட்சியில் கி. பி. 1232-ல் இப்பல்லவன் வழியினனாகிய கோப் பெருஞ்சிங்கனால் நிறைவேற்றப்பட்டமை அறியத்தக்கது. 3. இராசராச மகதைநா டாழ்வான்

இவன் மகத நாட்டை அரசாண்ட வாணர் மரபில் தோன்றியவன்; நம் குலோத்துங்கன் ஆட்சியில் தென்னார்க் காடு ஜில்லாவின் ஒரு பகுதியில் நாடு காவல் அதிகாரியாய்

1. Ins. 343 of 1912; S.I.I., Vol. III, No. 61.

2.S.I.I., Vol. VII. No. 1004; Ins. 391 of 1921; S.I.I., Vol. VII, No. 150.

3. Ins.467 of 1921; S.I.I., Vol. VIII, Nos. 319 and 320.