உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

105

விளங்கியவன். இவன் திட்டகுடித் தேவதான நிலங்களிலிருந்து தனக்குக் கிடைக்க வேண்டிய 'பெரும்பாடி காவல்' என்னும் வரியை அவ்வூர்க் கோயிலுக்கு அளித்தனனென்று அங்குள்ள கல்வெட்டொன்று உணர்த்துகின்றது.

4. விக்கிரம சோழ சேதிராயன்

2

இவன் தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள மலைய மானாட்டில் திருக்கோவலூரைச் சூழ்ந்த நிலப்பகுதியை அரசாண்ட ஒரு சிற்றரசன். இவன் புதல்வன் விக்கிரம சோழ கோவலராயன் என்பான்; கி. பி. 1137-ல் விக்கிரம சோழ சேதிராயன் மனைவி திருக்கோவலூரிலுள்ள வீரட்டான முடையார் கோயிலில் ஒரு மடைப்பள்ளி கட்டினாள் என்று அவ்வூர்க் கல்வெட்டொன்று கூறுகின்றது. * நம் குலோத்துங்கன் காலத்திலிருந்த மலையமானாட்டு சிற்றரசருள் கிளியூர் மலையமான் குலோத்துங்க சோழ சேதிராயனும் ஒருவன். இவன் மலையமானாட்டில் கிளியூரைச் சூழ்ந்த நிலப் பரப்பை அரசாண்ட ஒரு குறுநில மன்னன் ஆவன். தென்னார்க்காடு ஜில்லாவில் சண்பை என்னும் ஊரிலுள்ள சிவன் கோயிலுக்கு கி. பி. 1147-ல் இறையிலி நிலம் வழங்கிய கிளியூர் மலையமான் இராசகம்பீர சேதிராயன் என்பவன், மேலே குறிப்பிட்ட குலோத்துங்க சோழ சேதிராயனுக்குத் தம்பியோ அன்றி புதல்வனோ ஆதல்வேண்டும்.

5. குலோத்துங்க சோழ யாதவராயன்

இவன் திருக்காளத்தியைச் சூழ்ந்த நிலப் பகுதியை அரசாண்ட ஒரு யதுகுலச் சிற்றரசன். கட்டி தேவனென்னும் பெயருடையவன். இவன் திருக்காளத்திக் கோயிலில் நாள்தோறும் தவசிகளையும் அந்தணர்களையும் பிறரையும் உண்பித்தற் பொருட்டு வீரமங்கலம் என்னும் ஊரை கி. பி. 1139-ல் அக்கோயிலுக்கு அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.5

1. S. I. I., Vol. VIII, No. 283.

2.S. I. I., Vol. VII, No. 914.

3. Ibid, No. 913.

4. Ins. 102 of 1906.

5. Ins. 83 of 1922.