உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




106

6. சீயகங்கன்

.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4

இவன் மைசூர் இராச்சியத்தில் கங்க நாட்டிலிருந்த ஒரு குறுநில மன்னன்; மன்னன்; கங்கர் மரபினன்; கி. பி. 1147-ல் திருக்காளத்தி இறைவர்க்கு நாள்தோறும் திருவிளக்கு வைக்கும் பொருட்டு வன் 32 பசுக்கள் கொடுத்துள்ளனன்.1 நன்னூ லாசிரியராகிய பவணந்தி முனிவரை ஆதரித்துப் போற்றிய அமராபரண சீயகங்கனுடைய முன்னோர்களுள் இச் சீயகங்கன் ஒருவனென்பது உணரற்பாலது.

7. அதியமான்

இவன் கொங்கு நாட்டில் தகடூரிலிருந்து அரசாண்டு கொண்டிருந்த ஒரு சிற்றரசன். சேரரின் ஒரு கிளையினரான அதியமான் வழியினருள் ஒருவன். இவன் நலத்தின் பொருட்டுத் தர்மபுரிக் கோயிலில் கி. பி. 1145-ல் திருப்பணி செய்யப் பெற்றது என்று ஒரு கல்வெட்டு அறிவிக்கின்றது.2

8. மதுராந்தக பொத்தப்பிச் சோழ சித்தரசன்

வன் கடப்பை ஜில்லாவிலுள்ள பொத்தப்பி என்னும் ஊரிலிருந்து அதனைச் சூழ்ந்த நாட்டை அரசாண்ட ஒரு சிற்றரசன். கி. பி. 1141-ல் கடப்பை ஜில்லா நந்தலூரிலுள்ள குலோத்துங்க சோழ விண்ணகரத்திற்குரிய நிலங்களின் எல்லைகளைக் கோயிலில் கல்லில் வரையும்படி இவன் உத்தரவு செய்தான் என்று அங்குள்ள கல்வெட்டொன்று கூறுகின்றது.

3

தெலுங்க நாட்டில் குலோத்துங்கனுக்குத் திறை செலுத்திக் கொண்டிருந்த வேறு சிற்றரசர்கள், மகா மண்டலேசுவரன் பல்லய சோட மகாராசன்4 வெல நாண்டி குலோத்துங்க சோட கொங்கராசன், திரிபுவன மல்ல சோட மகாராசன், மகா

1. Ins.93 of 1922. 2.S.I.I.,Vol. VII, No. 534.

3. Ins. 572 of 1907.

4. S.I.I., Vol. VI, No. 170.

5. Ins. 123 of 1922.

6. S.I.I., Vol. VI, No.630.

6