உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

1

107

மண்டலேசுவரன் வீம நாயகன், பண்டராசன்,’ கந்தரவாடி வீமராசன்' என்போர். இவர்கள், தெலுங்க நாட்டில் வேங்கி நாடு முதலான வெவ்வேறு பகுதிகளிலிருந்து அரசாண்டவர் ஆவர். இவர்கள், தம் நாடுகளில் தாம் புரிந்த அறச் செயல்களை வரைந்துள்ள கல்வெட்டுக்களில் நம் குலோத்துங்க சோழனது ஆட்சியாண்டு குறித்திருப்பதால் இவர்கள் எல்லோரும் இவனுக்குக் கீழ்ப்பட்டிருந்த குறுநில மன்னரென்பது தெள்ளிது.

1. Ibid, No. 133.

2. Ibid, No. 137.

3. Ins. 116 of 1917.