உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




108

19. இரண்டாம் இராசராச சோழன் கி. பி. (1146-1163)

1

இரண்டாங் குலோத்துங்க சோழன் கி. பி. 1150-ல் இறந்த பிறகு, அவன் புதல்வனாகிய இரண்டாம் இராசராச சோழன் சோழ இராச்சியத்திற்குச் சக்கரவர்த்தியாகக் கங்கைகொண்ட சோழபுரத்தில் முடி சூட்டப்பெற்றான். இவன் தந்தை இராசகேசரி என்னும் பட்டமுடையவனாயிருந்தமையால் இவன் பரகேசரி என்னும் பட்டம் புனைந்து கொண்டு அரசாளத் தொடங் கினான். இவனுடைய மெய்க்கீர்த்திகள் ‘பூமருவிய திருமாதும்' எனவும், ‘பூமருவிய பொழிலேழும்' எனவும் தொடங்குகின்றன. இவையிரண்டும் இவனது ஆட்சியின் மூன்றாம் ஆண்டு முதல் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. இவற்றுள், 'பூமருவிய பொழிலேழும்' என்று தொடங்கும் மெய்க் கீர்த்தி மிக நீண்ட தொன்றாம். இம் மெய்க்கீர்த்திகளில் வரலாற்றுக் குறிப்புகள் காணப்படவில்லை. ஆயினும், இவற்றால் இவன் ஆட்சியின் சிறப்பு, தமிழ்த்தொண்டு, மனைவிமார்களின் பெயர்கள் ஆகியவற்றை அறியலாம். 'கடல் சூழ்ந்த பார்மாதரும்' எனவும், 'புயல் வாய்த்து வளம் பெருக' எனவும் தொடங்கும் வேறு இரண்டு மெய்க் கீர்த்திகள் இவன் கல்வெட்டுக்களில் மிக அருகிக் காணப்படுகின்றன.' இவற்றுள், 'கடல் சூழ்ந்த பார் மாதரும்' என்பது இவனுக்குப் பிறகு பட்டம்பெற்ற இரண்டாம் இராசாதிராச சோழனுக்கு உரியதாயிற்று. 'புயல் வாய்த்து வளம் பெருக' என்னும் பிறிதொரு மெய்க் கீர்த்தியின் தொடக்கம் இரண்டாம் இராசாதிராச சோழனுக்குப் பிறகு முடி சூடிய

1. Ins.465 of 1919, Ins. 243 of 1930.

2. S. I. I., Vol. VII. No. 432, Ins. 165 of 1908.

இராசராசனது ஆட்சியின் பத்தாம் ஆண்டில் செங்கற்பட்டு ஜில்லா மாகறலில் வரையப்பெற்ற கல்வெட்டில் ‘கடல் சூழ்ந்த பார் மாதரும்' என்று தொடங்கும் மெய்க் கீர்த்தியும், தஞ்சை ஜில்லாவில் திருநறையூரிலுள்ள ஐந்தாம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டில் ‘புயல் வாய்த்து' என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியும் உள்ளன.