உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

109

மூன்றாங் குலோத்துங்க சோழனுக் குரியதாயிற்று என்பது அவன் கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றது. எனவே, அவ் விரு வேந்தரும் இராசராசன் மெய்க்கீர்த்திகளின் தொடக்கங் களையே தமக்கு உரிமையாக்கிக் கொண்டனர் போலும். ஆட்சியின் இயல்பு

2

3

நம் இராசராசன் கல்வெட்டுக்கள் வடக்கேயுள்ள கோதாவரி,1 கிருஷ்ணா, குண்டூர், நெல்லூர்," ஜில்லாக்களிலும், மேற்கேயுள்ள சேலம்,5 கோலார் ஜில்லாக்களிலும் காணப்படுவதால் வெங்கி நாடு, கொங்கு நாடு, கங்க நாடு ஆகியவை இவன் ஆட்சிக் குட்பட்டிருந்தன என்பது திண்ணம், ஆகவே, இவன் தந்தை குலோத்துங்க சோழனது ஆளுகைக்கு உட்பட்டிருந்த நாடுகள் எல்லாம் சோழ இராச்சியத்திலிருந்து விலகாமல் இவன் ஆட்சியின் கீழும் அமைதியாக இருந்து வந்தன எனலாம். இவன் காலத்திலும் பெரும்போர்கள் நிகழாமையின் மக்கள் எல்லோரும் அல்லலின்றி இனிது வாழ்ந்து வந்தனர். இவன் தன் நாட்டில் 'தந்தையிலோர்க்குத் தந்தையாகியும் தாயிலோர்க்குத் தாயாகியும் மைந்தரிலோர்க்கு மைந்தராகியு மன்னுயிர்கட் குயிராகியும்' இருந்து அரசாண்டு வந்தான் என்பது இவனது மெய்க்கீர்த்தி கூறுவதால் அறியற்பாலதாகும்.

இருமொழிப் புலமை

இவ்வேந்தன், தன் தாய்மொழியாகிய தமிழிலும், வடமொழியிலும் சிறந்த பயிற்சியுடையவனா யிருந்தனன் என்று தெரிகிறது. இவனை 'முத்தமிழுக்குந் தலைவன்" என்றும்,

1. S. I. I., Vol. IV. Nos. 1050 of 1051.

.

2. Ins.847 of 1917, S. I. I., Vol. IV. No. 626.

3.S. I. I., Vol.VI. Nos. 163 and 175; Ins. No. 114 of 1917.

4. Nellore Inscriptions, O. 51 and 59.

5. S. I. I., Vol. VII No. 18.

6. Ep. Car., Vol. X, Kl. 75.

7.

வரஞ்செயும் பெருந்தவ மெனவும்

எத்துறையும் இறைவனெனவும்

முத்தமிழ்க்குந் தலைவனெனவும்

மூன்றுலகின் முதல்வ னெனவும் (இராசராசன்

மெய்க்கீர்த்தி)